Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது...!

வாசிப்பு நேரம்: 50 secs
No Comments
A big black nandhi statue decked with dhoti and garland.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருக்கோவிலில் உள்ள  நந்தியம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மாநகர பகுதியில் உள்ள திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி நகரம் தொண்டர்கள் நயினார் கோவில், தச்சநல்லூர் சிவன் கோவில், திருநெல்வேலி சந்திப்பு சொக்கநாதர் கோவில், கைலாசபுரம் கைலாசநாதர் கோவில், கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோவில், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்திசுவரர் திருக்கோயில், குறிச்சி சொக்கநாதர் கோவில், சிந்துபூந்துறை சிவன் கோவில், செப்பறை அழகியகூத்தர் கோவில் ஆகியவற்றில் நேற்று பிரதோஷ கால வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. 

தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாகத் திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருக்கோவில் ஊழியர்கள்மூலம்பிரதோஷ பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2026 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram