Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலி கோடை வசந்த உற்சவம் நேற்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது..!

Photo of Lord Nellaiappar and Gandhimathi Amman idols on a stage decked with colourful string lights and flowers. The head priest is performing an aarathi with multi-tiered lamps.

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவில். இங்கு சித்திரை மாதம் நடைபெறும் கோடை கால வசந்த உற்சவம் சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 26/04/21 ஆம் தேதி பொற்றாமரைகுளத் தீர்த்தவாரி முடிந்து, மறுநாள் 27/04/21 ஆம் தேதி தொடங்கி நேற்று 07/05/21 ஆம் தேதி வரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழா நடைபெற்ற நாட்களில் சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோயிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, அங்குள்ள அகழி முழுவதும் தண்ணீர் நிரப்பப்பட்டு ரம்மியாக காட்சியளித்தது. தண்ணீர் நிரம்பிய அகழிக்கு நடுவில் உள்ள மண்டபத்தில் வெற்றிவேற் பந்தலின் கீழ் எழுந்தருளிய அம்மையப்பருக்கு சிறப்பு யாகங்களுடன் கூடிய அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலையில் வசந்த மண்டபத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் இறுதி நாளான நேற்று வசந்த மண்டபம் முழுவதும் வித விதமான மலர்களாலும் வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அழகாக காணப்பட்டது. மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சுவாமி நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மைக்கும் வித விதமான மலர் மாலைகள் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தற்போது கொரோனா பரவல் காரணமாக திருக்கோவில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கோவிலுக்குள் உள்ள வசந்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் மற்றும் திருக்கோவில் ஊழியர்களை கொண்டு இவ்விழா இனிதே நடைபெற்றது. சுவாமி அம்பாளை கோடை வெப்பத்தில் இருந்து குளிர்விக்கும் பொருட்டு நடத்தப்படும் இவ்விழாவின் இறுதி நாளான நேற்று மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram