திருநெல்வேலி கால்வாயில் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு!

Water released from nellai kaalvaaiதிருநெல்வேலி மாவட்ட அணைகளில் இருந்து கடந்த 01/06/2021 ஆம் தேதி முதல், கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பாய்ந்தோடி, தடுப்பணைகள் மூலமாக திறக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் வழியாக சென்று விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை அளிக்கிறது.

இதனால் தற்போது தாமிரபரணியில் உள்ள தடுப்பணை வழியாக ஒவ்வொரு கால்வாயிலும் வரிசையாக தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி நேற்று தாமிரபரணியில் உள்ள சுத்தமல்லி தடுப்பணையில் இருந்து,  திருநெல்வேலிக்கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.சுமார் 130 நாட்களுக்கு திறந்து விடப்படும் இந்த தண்ணீர் மூலம் 4,168 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!