திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் ஆன்லைன் மூலம் கலைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

Governtment Museum - Nellaiதிருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் என்.பி.என்.கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  பல்வேறு கலைப் பயிற்சி வகுப்புகளை இலவசமாக இணையதளம் மூலம் நடத்தி வருகிறது. இந்த வாரம் வியாழக்கிழமையான இன்று 17/06/21, மாலை 3.00 மணிக்கு உபயோகமில்லாத கழிவு பொருட்களில் இருந்து கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் பங்குபெற பழைய அட்டைப்பெட்டி, கத்திரிக்கோல், பசை, ஸ்கெட்ச், ஒட்டும் டேப் ஆகியன தேவைப்படும்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜூம் செயலி எண்: 8740995990, கடவுச்சொல்: 333543 ஆகியவற்றை பயன்படுத்தி இணையதளம் மூலம் வகுப்பில் இணைந்து கொள்ளலாம். இந்த இலவச பயிற்சி வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளலாம் எனவும், இது பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள 9444973246 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு அருங்காட்சியகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.