திருச்செந்தூரில் நடைபெறும் சாயாபிஷேகம்!

Chaayabishekam in tiruchendurதிருச்செந்தூரின் கடலோரத்தில் திருச்செந்தில்நாதன் என்ற பெயரில் முருகப்பெருமான் அருளாட்சி செய்து வருகிறான். தேவர்களின் துயர் துடைக்க முற்காலத்தில் இந்த ஸ்தலத்தில் வைத்து தான் அசுரர்களை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் அருள்புரிந்ததாக கூறப்படுகிறது. எனவே திருச்செந்தூர் திருக்கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி மாதம் ஸ்கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவின் ஆறாம் நாள் இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ ஜெயந்திநாதர் சிறப்பு யாக சாலை பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் கண்டு பக்தர்கள் புடை சூழ சம்ஹார கோலம் பூண்டு, கடற்கரைக்கு எழுந்தருளி சூரர்களை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டருள்வார்.

பின்னர் சூரசம்ஹாரம் முடிந்து திருக்கோவில் திரும்பும் ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு, திருக்கோவில் பிரகாரத்தில் உள்ள 108 மஹாதேவர் சந்நதி முன்னர் வைத்து “சாயாபிஷேகம்” சிறப்பாக நடைபெறும். சாயம் என்றால் நிழல் அல்லது பிம்பம் என்று பொருள். ஆம்! சம்ஹாரம் முடிந்து உக்கிரமாக இருக்கும் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, ஸ்ரீ ஜெயந்திநாதர் முன்னர் அவரது பிம்பம் தெரியும் படியாக ஒரு பெரிய நிலைக்கண்ணாடியை நிறுத்தி, அபிஷேகம் செய்யப்படும். இதற்கு தான் சாயாபிஷேகம் என்று பெயர்! இந்த சாயாபிஷேகத்தை முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மனம் குளிர்வதாக ஐதீகம்!

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.