திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி சிறப்பு!

Paneer ilai vibhuthiமுருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாக விளங்குவது திருச்செந்தூர். இங்கு கடற்கரையில் அமையப்பெற்றுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி சிறப்பு பெற்றதாகும். இந்த பன்னீர் இலையை விபூதியை உண்டு தான் ஆதிசங்கரர் தனக்கு ஏற்பட்ட காச நோய் நீங்கப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். “நின் இலைநீறு கண்டால் காசம், கயம், குட்டம், யாவும் விண்டோடும்” என சுப்பிரமணிய புஜங்கத்தில் ஆதிசங்கரர் இதனை குறிப்பிட்டு பாடியுள்ளார்.

மகத்துவம் வாய்ந்த இந்த பன்னீர் இலை விபூதி இன்றளவும் தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் இந்த பன்னீர் இலை விபூதியை வாங்கி தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று பொக்கிஷமாக பாதுகாத்து வைத்து, மருந்தாக உட்கொள்வதை இன்றும் நாம் கண்டும், கேட்டும் உணரலாம்!

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!