திருபாகம்

திருநெல்வேலியின் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று திருபாகம். இது கடலை மாவு, முந்திரி, பாதம், சீனி, பால் மற்றும் நெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனுடன் கூடுதல் சுவைக்காக பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம். இந்த பாரம்பரிய இனிப்பு வெள்ளை காகிதத்தில் பொதிந்து கடைகளில் விற்பனை செய்யப்படும். இந்த திருபாகத்தில் கஜு கத்லி, மைசூர்பாக் மற்றும் பாதாம் அல்வா ஆகிய மூன்று இனிப்புகளின் சுவைகளும் சேர்ந்து இருக்கும். திரி இன் ஒன் சுவை கொண்ட இந்த திருபாகம் தயாரிக்கும் முறை பற்றி இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – அரை கிலோ.
  • சீனி – முக்கால் கிலோ.
  • காய்ச்சிய பால் – ஒரு கப்.
  • நெய் – 200 கிராம்.
  • முந்திரி பருப்பு – 100 கிராம்.
  • பாதாம் பருப்பு – 100 கிராம்..
  • பச்சை கற்பூரம் – ஒரு விரல் அளவு.
  • ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கடலை மாவை போட்டு லேசாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு திரித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் காய்ச்சிய பாலை கடலை மாவில் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் கடலை மாவு கரைசலை ஊற்றி, அதனுடன் சீனி சேர்த்து கிளறி, பின்னர் திரித்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு கலவையை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். இந்த கலவை நன்றாக சுருண்டு வரும்போது அதில் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். இப்போது இந்த கலவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அல்வா பதத்திற்கு வரும் போது அதில் ஒரு விரல் அளவு பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை தூவி கிளறி இறக்கினால் சுவையான திருநெல்வேலி திருபாகம் தயார்.

குறிப்பு:

திருபாகம் பக்குவமாக வர, கடலை மாவை கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

About Lakshmi Priyanka

Check Also

கருப்பட்டி குழல் புட்டு

புட்டு என்பது கேரளாவில் மிக பிரபலமான காலை உணவு ஆகும். கேரளா மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த புட்டு …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.