Logo of Tirunelveli Today
English

திருநெல்வேலி தல புராணம் (Tirunelveli Thala Puranam)

வாசிப்பு நேரம்: 5 mins
No Comments
Front view of the Nellaiappar temple gopuram, main entrance, and the shops next to the entrance, and the police barricades on the road.

திருநெல்வேலி எனும் புண்ணிய தலம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். தேவார பாடல் பெற்ற சிறப்புடையது. வற்றாத புண்ணிய நதியான தாமிரபரணியின் கரையில் அமையப்பெற்றுள்ளது. இந்த நகரின் மத்திய பகுதியில் சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மை திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இந்தத் திருக்கோவில் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்த பெருங்கோவிலாகும். இத்தலம் பற்றிய நூல்கள் பல உள்ளன. அவைகளில் தலபுராணங்களாக வேணுவன புராணமும், திருநெல்வேலித் தல புராணமும் படிக்க வேண்டிய முக்கிய நூல்களாகத் திகழ்கிறது. அவற்றுள் திருநெல்வேலியின் வரலாற்று வளமையை கூறும் திருநெல்வேலி தலப் புராணம் பற்றி இங்கு நாம் காண்போம். திருநெல்வேலி தலப் புராணத்தை முதன்முதலாக எழுதியவர் நெல்லையப்ப கவிராயர், வடமொழியில் இருந்த இப்புராணத்தை தமிழில் பாடல்களால் தொகுத்தவர். இவர் எழுதிய இப்புராணம், 1910 - ஆம் ஆண்டு அழகர்சாமி பிள்ளை என்பவரால் அனைவரும் படிக்கும் வகையில் அன்றைய எளிய தமிழில் வசன நடையாக வெளியிடப்பட்டது. இந்தத் திருநெல்வேலி தலப் புராணம் 6891 பாடல்களைக் கொண்டு, 120 சருக்கங்களாகக் கீழ்கண்டவாறு பாடப்பட்டுள்ளது.

    1. நைமிசாரணியச் சருக்கம்
    2. நாட்டுச் சருக்கம்
    3. நகரச் சருக்கம்
    4. வேணுவனச் சருக்கம்
    5. தருமதேவதை இடப வாகனமான சருக்கம்
    6. தக்கன் வேள்வி சருக்கம்
    7. பருப்பதச் சருக்கம்
    8. காம தகனச் சருக்கம்
    9. மோனம் நீங்கு சருக்கம்
    10. தவங்காண் சருக்கம்
    11. திருமணம் பேசுச் சருக்கம்
    12. வரை அலங்காரச் சருக்கம்
    13. கணங்கள் வருகைச் சருக்கம்
    14. இமயமலையில் இறைவன் எழுந்தருளிய சருக்கம்
    15. அகத்தியரை தென் திசைக்கு அனுப்பிய சருக்கம்
    16. கிரௌஞ்சகிரி சருக்கம்
    17. கிரௌஞ்சமலை விந்தியமலை சருக்கம்
    18. வில்லவன் வாதாபி சருக்கம்
    19. திருக்குற்றால சருக்கம்
    20. அகத்தியர் வேணுவனம் வந்த சருக்கம்
    21. தாமிரபரணி தீர்த்த சருக்கம்
    22. பாவநாசச் சருக்கம்
    23. திருமூலநாதர் சருக்கம்
    24. காசிப ஈஸ்வரர் சருக்கம்
    25. திருக்கோட்டிநாதர் சருக்கம்
    26. ஆனைக்கு அருளிய சருக்கம்
    27. திருப்புடைமருதூர் சருக்கம்
    28. சோமதீர்த்தச் சருக்கம்
    29. உரோமேஸ்வரர் தீர்த்தச் சருக்கம்
    30. துருவாசர் தீர்த்தச் சருக்கம்
    31. மந்திரேஸ்வரர் தீர்த்தச் சருக்கம்
    32. அக்னீஸ்வரன் தீர்த்தச் சருக்கம்
    33. துர்க்கா தீர்த்தச் சருக்கம்
    34. சிந்துபூந்துறை சருக்கம்
    35. ஏழு இருடிகள் தீர்த்தச் சருக்கம்
    36. குட்டத்துறை தீர்த்தச் சருக்கம்
    37. சடாயு தீர்த்தச் சருக்கம்
    38. மங்களேஸ்வரத் தீர்த்தச் சருக்கம்
    39. பிதிர் தீர்த்தச் சருக்கம்
    40. வைகுண்ட தீர்த்தச் சருக்கம்
    41. காந்தீஸ்வர தீர்த்தச் சருக்கம்
    42. ஆழ்வார்திருநகரி என்ற திருக்குருகூர் சருக்கம்
    43. நவலிங்கபுரச் சருக்கம்
    44. பிரமேசுரச் சருக்கம்
    45. சோமேஸ்வரர் சருக்கம்
    46. திருச்செந்தூர் சருக்கம்
    47. சங்கமத்துறைச் சருக்கம்
    48. தாமிரபரணி சருக்கம்
    49. அகத்தியர் லோபாமுத்திரைக்கு தல மகிமை உரைத்த சருக்கம்
    50. அகத்தியருக்கு திருமணக் கோலம் கட்டிய சருக்கம்
    51. கயிலாய சிறப்பு சருக்கம்
    52. அறம் வளர்த்த சருக்கம்
    53. காட்சிக் கொடுத்த சருக்கம்
    54. திருக்கல்யாண சருக்கம்
    55. பட்டாபிஷேக சருக்கம்
    56. திருமால் திருவிழா நடத்திய சருக்கம்
    57. தாருகாவன சருக்கம்
    58. ஏழு பெரும் முனிவர்கள் கலியுகத்துக்கு அஞ்சி நெல்லை வந்த சருக்கம்
    59. திருமூல லிங்கச் சருக்கம்
    60. வேண்ட வளர்ந்த மாலிங்கச் சருக்கம்
    61. நெல்லுக்கு வேலியிட்ட சருக்கம்
    62. சுவேத முனி காலனை வென்ற சருக்கம்
    63. சிந்துபூந்துறை லிங்க மகிமை சருக்கம்
    64. பாதலங்கம்பைச் சருக்கம்
    65. கருமாரி சருக்கம்
    66. பொற்றாமரை சருக்கம்
    67. தீர்த்தச் சருக்கம்
    68. நீலவண்ணன் அன்னதான மகிமை சருக்கம்
    69. ஆனி விழாவில் அன்னதான பெருமை சருக்கம்
    70. வெண்ணீற்று பெருமைச் சருக்கம்
    71. உருத்திராட்ச பெருமைச் சருக்கம்
    72. ஐந்தெழுத்து பெருமைச் சருக்கம்
    73. சிவபூசை மகிமை சருக்கம்
    74. பிரதோஷ மகிமை சருக்கம்
    75. மலர் அர்ச்சனைச் சருக்கம்
    76. உருத்திராட்ச அபிஷேகச் சருக்கம்
    77. சிவபுண்ணிய பெருமை சருக்கம்
    78. விளக்கு பெருமை சருக்கம்
    79. தொண்டர்தம் பெருமை சருக்கம்
    80. வருண ஆசிரம ஒழுக்கச் சருக்கம்
    81. பிரம்மசாரியச் சருக்கம்
    82. பெண்ணின் பெருமை சருக்கம்
    83. ஆசாரம் கூறிய சருக்கம்
    84. இல்லறத் தன்மை கூறிய சருக்கம்
    85. துறவறம் கூறிய சருக்கம்
    86. சர்வ பிராயச்சித்த சருக்கம்
    87. நான்கு யுகங்கள் தவம் புரிந்து வரம் பெற்ற சருக்கம்
    88. மரகத வடிவம்மைச் சருக்கம்
    89. பிட்டாபுரத்தி அம்மைச் சருக்கம்
    90. நெல்லை கோவிந்தர் சருக்கம்
    91. அரி, அயன் அர்ச்சனைச் சருக்கம்
    92. நாரதர் வரம் பெற்ற சருக்கம்
    93. அனந்தனும், அரவங்களும் வரம் பெற்ற சருக்கம்
    94. அகத்தியர் ஆட்சிச் சருக்கம்
    95. வங்கிய குலசேகர பாண்டியன் சருக்கம்
    96. குலசேகர பாண்டியன் சருக்கம்
    97. உருத்திர கோடியர் சருக்கம்
    98. வெள்ளை யானையின் சாபம் விலகிய சருக்கம்
    99. ஆமை அர்ச்சனை செய்த சருக்கம்
    100. பிரமவிருத்திபுரச் சருக்கம்
    101. அயோத்தி ராமன் அர்ச்சனை செய்த சருக்கம்
    102. தல மகிமை கேட்ட கண்ணனுக்கு பிள்ளைப்பேறு அருளிய சருக்கம்
    103. பொற்றாமரையில் மூழ்கிய பெண்களுக்குப் புடவை கொடுத்த சருக்கம்
    104. காமுகனுக்கும் கருணை காட்டிய சருக்கம்
    105. ஆசானாக வந்து அருளிய சருக்கம்
    106. பாடகர் மகனைப் பாதுகாத்த சருக்கம்
    107. அறியாமல் செய்த பிழை பாவம் அல்ல என்ற சருக்கம்
    108. கருவூர்ச் சித்தர் சருக்கம்
    109. திருஞானசம்பந்த பிள்ளையார் சருக்கம்
    110. தொண்டர்கள் நாயனார் சருக்கம்
    111. நின்ற சீர் நெடுமாற நாயனார் சருக்கம்
    112. கல் இடபம் புல் உண்ட சருக்கம்
    113. தாமிரசபையில் அம்மைக்கு நடனம் கட்டிய சருக்கம்
    114. தேவர்களுக்கு அகோரதவம் காட்டியச் சருக்கம்
    115. ஊர்த்துவ தாண்டவம் ஆடியச் சருக்கம்
    116. அம்மைக்கு அனந்த அழகு நடனம் காட்டியச் சருக்கம்
    117. மானூர்ச் சபையில் ஆச்சரிய நடனம் ஆடிய சருக்கம்
    118. தாமிரசபையைக் கண்டவனும், கண்டவனை கண்டவனும் கதியடைந்த சருக்கம்
    119. தாமிரசபை நடனம் கண்டவனைக் கண்ட கயவனும் கதியடைந்த சருக்கம்
    120. திருநெல்வேலித் தல புராணம் படித்தவரைக் கண்ட பாவியும் கதியடைந்த சருக்கம்

திருநெல்வேலி தலப் புராணத்தை உணர்ந்து படிக்கும் போது பழம்பெரும் புராணக் கதைகள், தாமிரபரணி கரையில் அமைந்துள்ள புண்ணிய நீர்த்துறைகள், அந்நீர்த்துறைகளில் அமைந்துள்ள திருக்கோவில்கள், பாண்டிய அரசர் வரலாறு எனப் பல்துறைச் செய்திகளை நயமுடன் அமைத்துத் தீந்தமிழில் தந்துள்ள மிகச் சிறந்த நூல் தான் இந்த "திருநெல்வேலித் தல புராணம்". இத்தகைய அரிய பொக்கிஷமாக திகழும் திருநெல்வேலி தல புராணத்தை ரத்தின சுருக்கமாக இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram