சந்தனக்கட்டைகளில் வாசம் செய்யும் பெருமாள்!

Karungulam Venkataachalapathy Templeதிருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது கருங்குளம் என்னும் ஊர். இங்கு சிறிய சிறிய மலைக்குன்றின் மீது அமையப்பெற்றுள்ளது வெங்கடாசலபதி திருக்கோவில். வகுளகிரி என்று சிறப்பித்து அழைக்கப்படும் இந்த பெருமாள் கோவிலில் இரண்டு சந்தனக்கட்டைகளில்  நித்யவாசம் புரிந்து பெருமாள்  மூலவராக காட்சி தருகிறார்.  

ஆம்! கருவறையில் காட்சி தரும் வெங்கடாசலபதி பெருமாளை உற்று கவனித்தால் நாம் இதனை உணரலாம். இரண்டு சந்தன கட்டைகளுக்கு மேல் வஸ்திரம், கிரீடம், திருநாமம், சங்கு, சக்கரம் சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். இதுபோன்று வேறெங்கும் பெருமாளை வேறு எங்கும்  தரிசிக்க முடியாது என்பது இந்த தலத்தின் சிறப்பம்சம் ஆகும். இந்த பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் நாம் வணங்கினால் சகல வளங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.