Logo of Tirunelveli Today
English

மண் மணம் மாறா பாரம்பரிய உணவுகள்

திருநெல்வேலினு சொன்ன உடனே எல்லாருக்கும் ஞாபகம் வருவது அல்வா.
அல்வா மட்டும் இல்லைங்க! இங்க சொதி குழம்பு சாப்பாடு, கூட்டாஞ்சோறு, உளுந்தம்பருப்பு சோறு இன்னும் நிறைய மண் மணம் மாறாத உணவு வகைகள் இருக்கு. அதுபற்றிய தகவல்களை இங்கு நாம் காணலாம்.

நெல்லை பிரபல உணவு வகைகள்

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்

சூடான வெள்ளை சாதத்தை சிறு மலை போல வாழை இலையில் பரப்பி, நடுவில் குழி பறித்து நீச்சல்குளம் போல அதில் சொதி குழம்பை ஊற்றி சாப்பிடும் ரசனை மிக்கவர்கள் திருநெல்வேலிக்காரர்கள்!
பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
  • சப்பாத்தியை தயார் செய்து சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் அது நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்கும்.
  • சேனைகிழங்கை சீக்கிரம் வேக வைப்பதற்கு, வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
  • உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
  • தயிர் அதிகம் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைக்கலாம்.
  • கோதுமை மாவில் வண்டு வராமல் இருக்க அதில் சிறிதளவு உப்பை கலந்து வைக்கலாம்.
  • இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் தலை கீழாக மாவிற்குள் போட்டு வைக்கலாம். இதனால் மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், பளககமலம இரககம.
  • இட்லி மாவு மிருதுவாக இருக்க, மாவு அரைக்கும் போது சிறிது வெண்டக்காய் துண்டுகளை சேர்த்து அரைக்கலாம்.
  • குக்கரில் சாதம் வைக்கும் போது நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
  • பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும் போது, சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக வைத்தால், சாதம் நன்றாக உதிரி உதிரியாக வெந்து வரும்.
  • சப்பாத்திக்கு மாவு பிசையும் போது வெந்நீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மென்மையாக இருக்கும்.
அறுசுவை நெல்லை உணவுகள்
  • புளியில்லா குழம்பு - சுட்ட அப்பளம்
  • முழு உளுந்து தோசை - பச்சை மிளகாய் துவையல்
  • சொதி குழம்பு - இஞ்சி பச்சடி
  • கூட்டாஞ்சோறு - தயிர் பச்சடி
  • உளுந்தம் பருப்பு சோறு - எள்ளு துவையல்
  • இடியாப்பம் - சொதி
  • இட்லி - கத்திரிக்காய் கிச்சடி
  • இடிசாம்பார் - அவியல்
  • புலித்தண்ணி - வறுத்த பருப்பு துவயல்
  • குருணை அரிசி உப்புமா - மோர் குழம்பு
  • அப்பம் - தேங்காய்ப்பால்
  • அடை தோசை - அவியல்

தற்போதைய பதிவுகள்

உங்களுக்குப் பிடித்தமான திருநெல்வேலி இனிப்புகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் பலகாரங்கள் ஆகியவற்றை பற்றிய செய்முறை குறிப்புகள் பற்றி இங்கு காணலாம். இந்த உணவுகளை நீங்களே செய்யவும், உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் எங்கள் தற்போதைய பதிவுகளை தவறாமல் படியுங்கள்!

நெல்லை சமையல் குறிப்புகள்

கருப்பட்டி ஆப்பம்
ஆப்பம் என்பது அரிசி மாவில் தயாரிக்கப்படும் கிண்ண வடிவிலான ஒரு வகை உணவு பதார்த்தம் ஆகும். இந்த ஆப்பத்தை தயார் செய்ய பிரத்யேக ஆப்பச்சட்டி பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் மிகவும் பிரபலமான இந்த ஆப்பம் தென் தமிழகத்திலும் பரவலாக விரும்பி உண்ணப்படுகிறது. கேரளாவில் ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள கடலை கறி, குருமா பிரபலம் என்றால் தமிழகத்தில் ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் பால் - சீனி மற்றும் சாம்பார் - சட்னி பிரபலம் ஆகும். பொதுவாக காலை நேர உணவிற்கு ஆப்பம் […]
மேலும் படிக்க
அரைத்த கோதுமை தோசை
கோதுமை தோசை என்பது தென்னிந்திய உணவு வகைகளுள் மிகவும் பிரபலமான உணவாகும். இந்த கோதுமை தோசைக்கு, நாம் கடையில் கிடைக்கும், பாக்கெட் கோதுமை மாவை வாங்கி தான் பொதுவாக பயன்படுத்துவோம். ஆனால் முழு கோதுமையை ஊற வைத்து, தோசை மாவாக அரைத்து எடுத்து கோதுமை தோசை தயார் செய்யும் முறை பற்றி இங்கு காணலாம். தேவையான பொருட்கள்: முழு கோதுமை - 2 உழக்கு. இட்லி அரிசி - அரை உழக்கு. வெந்தயம் - 1 ஸ்பூன். […]
மேலும் படிக்க
கருணைக்கிழங்கு மசியல்
கருணைக்கிழங்கு உடலுக்கு தேவையான அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலில் ஒரு வகை பிரகாசத்தையும் தருகிறது. நம் உடம்பில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை குணப்படுத்த இது ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் பி 6 அதிகமாக உள்ளது, மேலும் வைட்டமின் சி மற்றும் ஏ, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த கருணைக்கிழங்கு மசியல் தயாரிக்க எளிதானது. இதில் […]
மேலும் படிக்க
திருநெல்வேலி புளிக் குழம்பு
திருநெல்வேலி புளிக் குழம்பு. திருநெல்வேலி புளிக்குழம்பு (nellai cooking / Tirunelveli Recipe / Tirunelveli Puli Kulambu) தனித்துவமான சுவையுடன் காரசாரமாக இருக்கும். இந்த குழம்பு செய்யும் முறையும் எளிமையானது தான். இந்த குழம்பில் முருங்கைக்காய் அல்லது கத்திரிக்காய் சேர்ப்பது கூடுதல் சுவை தரும். காய்கறிகள் இல்லையென்றால் கூட, வெங்காயம் மற்றும் பூண்டுகளுடன், சுண்டை வற்றல் சேர்த்து செய்யலாம். இந்த குழம்பு மீதமானாலும், கடைந்த கீரை மற்றும் கூட்டு ஆகியவற்றை குழம்புடன் சேர்த்து சுண்ட வைத்தால், […]
மேலும் படிக்க
அரைத்துவிட்ட அரிசி பாயாசம்
தமிழக மக்களின் உணவுகளில் பாயாசம் மிகவும் முக்கிய இடத்தை பெறும். பாயாசம் இல்லாத கல்யாண விருந்தை நாம் காண முடியாது. தென் தமிழக பகுதிகளில் சேமியா பால் பாயாசம், பாசிப்பருப்பு-ஜவ்வரிசி பாயாசம் போன்றவை மிகவும் பிரசித்தம் என்றால் திருநெல்வேலி பகுதியில் கூடுதலாக அரைத்த அரிசி பாயாசமும் பிரசித்தம் ஆகும். பச்சரிசியுடன், தேங்காய் துருவல் கலந்து அரைத்து செய்யப்படும் இந்த பாயாசத்தின் செய்முறை பற்றி இங்கு நாம் காணலாம். தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப். தேங்காய் […]
மேலும் படிக்க
இளநீர் பாயாசம்
இளநீர் பாயாசம் மிகவும் எளிமையான மற்றும் விரைவாக செய்யக்கூடிய இனிப்பு வகை ஆகும். தென்தமிழகத்தில் மிகவும் பிரபலமான இந்த இளநீர் பாயாசம் பல்வேறு விழாக்களிலும் சிறந்த இனிப்பு உணவாக பரிமாறப்படும். இந்த பாயாசம் சுண்டக் காய்ச்சிய பசும்பால், தேங்காய் பால் ஆகியவற்றின் இளநீரின் தண்ணீர் மற்றும் வழுக்கை கலந்து தயார் செய்யப்படுகிறது. பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த இளநீர் பாயாசம் தயாரிக்கும் முறை பற்றி இங்கு நாம் காணலாம். தேவையான பொருட்கள்: இளநீர் - 2 எண்ணம். […]
மேலும் படிக்க
மேலும் படிக்க

நெல்லை உணவு கேலரி

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER

பார் போற்றும் பாரம்பரிய சுவை - திருநெல்வேலியின் தனித்துவம்!

திருநெல்வேலி மக்கள் உணவுகளை ரசித்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். பாரம்பரிய உணவுப் பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வரும். இங்கு ஆச்சிகள் வகுத்த சமையல் குறிப்புகள் இன்று வரை பின்பற்றப்படுகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நகரமும் அதன் சொந்த சமையல் பாணி மற்றும் செய்முறையைக் கொண்டுள்ளது, இது உணவின் மீதான தீவிர ரசனையை பிரதிபலிக்கிறது. உண்மையில் திருநெல்வேலி உணவுகள் பார் போற்றும் பாரம்பரிய சுவை கொண்டதாக திகழ்கிறது.
அறுசுவைக்கு விருந்தளிக்கும் உணவுகள்
  • சுடச்சுட கருப்பட்டி பணியாரம்!
  • நெய் மணக்கும் அல்வா!
  • தித்திக்கும் திருப்பாகம்!
  • தேங்காய் பாலில் சொதி குழம்பு!
  • காரசாரமான கூட்டாஞ்சோறு!
  • ஆரோக்கியமான உளுந்தஞ்சோறு!
இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு? மேலும் தெரிந்துகொள்ள எங்கள் பதிவுகளை காணுங்கள்!
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top magnifiercrossarrow-righttext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram