திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது புளியிலா குழம்பு. இந்த குழம்புக்கு புளி சேர்ப்பதில்லை. புளிப்புச்சுவையும் இருக்காது. அதனால் புளியில்லா குழம்பு என்று பெயர்.
பத்தியம் இருப்பவர்கள் பெரும்பாலும் புளி சேர்க்கக்கூடாது, என்பதால் பத்தியக்காலத்தில் இக்குழம்பு சேர்க்கப்படும். பத்தியத்திற்காக செய்யப்படும் போது முருங்கைக்கீரை மற்றும் தாளிசம் செய்வது தவிர்த்து செய்வார்கள்.
புளியில்லா குழம்பு ஒரு வகை தனிருசியாகத்தான் இருக்கும். இதில் முருங்கைக்கீரை சேர்ப்பதால் உடம்புக்கும் நல்லது. இதனை சாதத்திற்கு ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்.
இப்போ இதன் செய்முறையை பார்ப்போமா:
தேவையான பொருட்கள்:
பாசிபறுப்பு 100 கிராம் (வேக வைத்தது),
முருங்கைக்கீரை 4 கொத்து (உறுவியது),
முருங்கைக்காய்-1,
கத்திரிக்காய்-1,
மொளகாத்த பொடி-2தேக்கரண்டி,
மஞ்சள் தூள்-1தேக்கரண்டி,
உப்பு-தேவைக்கு,
கடுகு, கு. பருப்பு, நல்லெண்ணெய்-தாளிக்க.
அரைக்க:
தேங்காய் 4டீஸ்பூன்
சீரகம் வெள்ளைப்பூடு 4 பல்
சிறிய வெங்காயம் 3
இத நல்லா அரைச்சு வைச்சுக்கனும்.
- ஒரு பாத்திரத்தில் குழம்புக்கு தேவையான தண்ணீரில் வத்தல்பொடி, மஞ்சள் பொடி உப்பு கலந்து கூட்டி அதில் நறுக்கிய காய்களையும், உறுவிய முருங்கைக்கீரைகளையும் போட்டு வேக வைக்கவும்.
- வெந்ததும் வேக வைத்த பாசிபறுப்பை சேர்த்து, அரைத்து வைத்த விழுதுகளையும் கூட்டி கொதிக்க விடவும்.
- இறுதியாக நல்லெண்ணெயில் கடுகு, குத்து பருப்பு தாளித்து தேவையென்றால் பெருங்காய தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்கினால் புளியிலா குழம்பு தயார்.

சமையல் குறிப்பு உபசாரம்: சங்கரநயினார்
எனது இயற்பெயர் சங்கரநயினார். நான் பிறந்தது பாளையங்கோட்டை. வளர்ந்தது, படித்தது எல்லாம் பாளையங்கோட்டையில் என் ஆச்சி வீட்டில் இருந்தபடி தான். சிறுவயதிலிருந்தே ஊரின் மீது அதிகபற்று உண்டு. ஏலேய் நான் திருநெவேலிக்காரம்லேனு பெருமையா சொல்லிக்கிட்டு இருப்பேன். பாளையங்கோட்டையில் பிறந்தாலும், வாழ்ந்தாலும் மேலும் படிக்க>>