Logo of Tirunelveli Today
English

பாபநாசம் மலையில் மீண்டும் அகத்தியர் - லோபாமுத்திரை திருமேனிகள் பிரதிஷ்டை

வாசிப்பு நேரம்: 2 mins
No Comments
Idols of agathiyar and lobamudhrai ammai in paapanaasam malai.

நெல்லை மாவட்டம், பாபநாசம்  பொதிகை மலையில் உள்ள அகத்தியர் அருவிக்கு அருகில் கல்யாண தீர்த்தம் என்னும் தீர்த்தக்கட்டம் உள்ளது. இங்கு ஒரு சிவன் கோவிலும், திறந்தவெளியில் அகத்தியர் - லோபாமுத்திரை சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிக்கு செல்வதற்கு  பக்தர்கள் அதிக அளவில் முன்னர் வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வனத்துறையின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் இந்த பகுதிக்கு செல்ல கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் இங்குள்ள மலைப்பகுதியில் கடுமையான மழை பொழிந்ததால், தாமிரபரணியில் பெரும் வெள்ளம்  ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த  அகத்தியர் - லோபாமுத்திரை திருமேனிகள் சேதமடைந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இங்கிருந்த அகத்தியர் - லோபாமுத்திரை திருமேனிகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாகவும், அங்கிருந்த கோவிலை அளிக்க சதிவேலை நடப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. 

ஆனால் இந்த திருமேனிகள் ஜனவரி மாதம் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துவிட்டதாகவும், அப்போதே அந்த இடத்தில் புதிய அகத்தியர் - லோபாமுத்திரை திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய ஆலோசனை செய்யப்பட்டு, உபயதாரர் மூலம் புதிய திருமேனிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அந்த திருமேனிகளும் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உடன் இந்த புதிய திருமேனிகள் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு நாட்களாக பரவிய  வதந்தியால் வருத்தத்தில் இருந்த பக்தர்களுக்கு இந்த தகவல் ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram