பாளையங்கோட்டை சிவன் கோவில் சண்முகர் சிறப்பு!

Sri Murugarபாளையங்கோட்டை நகரில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ கோமதி அம்பாள் உடனுறை ஸ்ரீ திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலில் அமையப்பெற்றுள்ள சண்முகர் சன்னதியின் வரலாறு தனிச்சிறப்பு பெற்றதாகும்.

முற்காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள தெய்வத்திருமேனிகளை டச்சுக்காரர்கள் கொள்ளையடித்து கடல் வழியாக கொண்டு சென்றனர். அப்போது முருகப்பெருமான் திருவிளையாடலால் பெரும்புயல் காற்று வீச, பயந்து போன கொள்ளையர்கள் அந்த திருமேனிகளை கடலுக்குள் போட்டுவிட்டு தப்பிச்ச சென்றனர். இதற்குள் திருச்செந்தூர் கோவிலில் இருந்து காணாமல் போன சண்முகர் திருமேனிக்கு பதிலாக , புதிய சண்முகர் திருமேனி செய்ய முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டது.

புதிய சண்முகர் திருமேனி திருநெல்வேலி அருகில் உள்ள ஸ்தபதிகளால் உருவாக்கப்பட்டு, மாட்டு வண்டியில் வைத்து பயணமாக திருச்செந்தூர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த மாட்டு வண்டி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பாதையில் பாளையங்கோட்டை அருகே வந்து கொண்டிருக்கும் போது, கடலில் விழுந்த சண்முகர் திருமேனி முருகப்பெருமான் அருளால் கிடைத்து விடுகிறது. இதனால் புதிதாக செய்யப்பட்ட சண்முகர் திருமேனி பாளையங்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது. எனவே இந்த சண்முகரை வழிபட்டால் திருச்செந்தூர் சண்முகரை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.