பாளையங்கால்வாயில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு !

Palayaangkaalvai water releaseகார் பருவ சாகுபடிக்காக ஜூன் 1-ந் தேதி அன்று  நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு ஆகிய மூன்று அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக பாய்ந்தோடி, திருநெல்வேலிக் கால்வாய், பாளையங்கால்வாய் , நதியுண்ணிக் கால்வாய், கோடகன் கால்வாய்  உள்பட 11 கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு செல்லும்.

இதனை அடுத்து  நேற்று திருநெல்வேலி – மேலச்செவல் பகுதியில் உள்ள பாளையங்கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்துல்வகாப் அவர்கள் கலந்து கொண்டு பாளையங்கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீர் மூலம் 7 குளங்கள் மற்றும் 22 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 5,974 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாசன வசதி பெறக்கூடிய அனைத்து விவசாய நிலங்களிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் தடுப்பூசி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக இன்று முதல் கூடுதல் மையம் திறக்கப்படுகிறது. தினமும் தடுப்பூசி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.