ஒரே கருவறையில் காட்சிதரும் மகாவிஷ்ணு மற்றும் துர்க்கை அம்பாள்!

Seevalaperi Templeதிருநெல்வேலி மாநகரத்தில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராமநதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் அமையப்பெற்றுள்ள ஸ்தலம் சீவலப்பேரி. முற்காலத்தில் ஸ்ரீவல்லபபேரேரி என்று வழங்கப்பட்ட இந்த ஸ்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கை திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வேறு எந்த கோவிலிலும் காண முடியாத சிறப்பாக இங்கு ஒரே கருவறையில் மகாவிஷ்ணுவும், துர்க்கை அம்பாளும் அருகருகே அமர்ந்து அண்ணன் – தங்கை திருக்கோலத்தில் காட்சித்தருகிறார்கள்.

பொதுவாக நம் இந்து மத வழிபாட்டில் கோவில் கருவறையில் சுவாமி மற்றும் அம்பாள், பெருமாள் மற்றும் தாயார் அருகருகே அமர்ந்து தான் தம்பதியாக சேர்த்தி காட்சித்தருவார்கள். ஆனால் இங்கு அண்ணன் – தங்கை திருக்கோலத்தில் மகாவிஷ்ணுவையும், துர்க்கை அம்பாளையும் தரிசிப்பது நமக்கு ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் தரும் என்பதில் ஆச்சரியமில்லை! நம் வாழ்வில் ஒரு முறையாவது இந்த அற்புதக்காட்சியை தரிசித்து அருள்பெற நாம் சீவலப்பேரி செல்வோமாக!

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.