திருநெல்வேலி செய்திகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களின் செய்திகள் இங்கு உங்களுக்காக!

இன்றைய செய்திகள்

மாநகர்
திருநெல்வேலி மாநகராட்சி சம்பந்தமான புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு!
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குப்பைகள் தேக்கம், பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், வடிகால் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவற்றில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை ஏற்கனவே நடைமுறையில் உள்ள 94899 30261 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் அவர், இந்த வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கப்படும் குறைகள் / புகார்கள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு […]
மேலும் படிக்க
திருநெல்வேலி மாநகரில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரம் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் “சீர்மிகு நகரம்” திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டையில் ரூ.13.8 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நவீன பஸ்நிலைய கட்டுமான பணிகள், ரூ.14.27 கோடியில் புனரமைக்கப்படும் புதிய பேருந்து நிலைய வளாக வளர்ச்சி பணிகள், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.11.75 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்தும் இடம், மேலும் அதே வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி இருசக்கர வாகன நிறுத்தும் இடம் பணிகள், ரூ.14 கோடியே 68 லட்சத்தில் […]
மேலும் படிக்க
பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் காணொளி மூலமாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பங்கு கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். இதில் மாநகராட்சியின் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இது போல பொதுமக்களுடன் காணொளி கலந்துரையாடல் நடைபெறும் என்றும், அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு […]
மேலும் படிக்க
மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஜமாபந்தி நேற்று முதல் துவக்கம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை  ஜமாபந்தி நடைபெறுவது வழக்கம். இந்த ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள வரவு செலவு கணக்குகள், பதிவேடுகள் ஆய்வு செய்து தணிக்கை செய்யப்படும். மேலும் பட்டா மாற்றம் செய்தல், தனிப்பட்டா வழங்குதல் உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஜமாபந்தி  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானுர் தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. மானூர் தாலுகா ஜமாபந்தி அதிகாரியாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஜமாபந்தியை தொடங்கி வைத்து, […]
மேலும் படிக்க
திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது!
திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த இசைப்பள்ளியில் பயில விரும்பும் மாணவ - மாணவிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த படிப்புகளை 3 ஆண்டுகள் முழுநேரமாக படிக்க வேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.152, இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.120 மட்டும் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் […]
மேலும் படிக்க
கூடங்குளம் அணு மின்நிலையத்தில் புதிய அணு உலைகள் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது!
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணு மின்நிலையத்தில் ஏற்கனவே 1, 2  இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக  3 மற்றும் 4 வது அணு உலையின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது மூன்றாம் கட்டமாக  சுமார் 49 ஆயிரத்து 621கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 5 மற்றும் 6 வது அணு உலைகள் அமைக்கும் பணி நேற்று காலை பூமி பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியை […]
மேலும் படிக்க
ஆன்மிகம்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் திருவிழாக்கால பீமன்.
திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு வருடம்தோறும் நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும் காலங்களில் எழுந்தருள்வதற்காக மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பீமன் திருமேனி இங்கு உள்ளது. இந்த பிரம்மாண்ட திருமேனியை ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும் காலங்களில் மட்டுமே திருக்கோவில் ரத வீதிகளில் நாம் தரிசிக்க முடியும் என்பது சிறப்பம்சம் ஆகும்.
மேலும் படிக்க
திருநெல்வேலி அருகே உள்ள பஞ்ச குரோச ஸ்தலங்கள்!
திருநெல்வேலி அருகிலுள்ள ஐந்து சிவாலயங்கள் பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முற்காலத்தில் தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, சிவபெருமான் அம்பெய்தி உடைத்தார். அந்த அமுதம் பூலோகத்தில் பல்வேறு இடங்களில் சிதறி ஐந்து குரோசம் தூரம் வரையில் பரவி ஐந்து ஸ்தலங்களை உண்டாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும். ஆக ஐந்து குரோச தூரத்தில் அமையப்பெற்றுள்ள கோவில்கள் என்பதால் இந்த ஐந்து சிவாலயங்களும் "பஞ்ச குரோச ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுவதாகவும், இந்த […]
மேலும் படிக்க
திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.
திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் "தச வீரட்டான ஸ்தலங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும். இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது. தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்: 1. பக்த ஸ்தலம்: சிவசைலம்  ஸ்ரீ சிவசைலப்பர் திருக்கோவில். 2. மகேச ஸ்தலம்: வழுதூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் […]
மேலும் படிக்க

தற்போதைய பதிவுகள்

திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், தென்காசி மாவட்டம், குமரி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆகிய இடங்களில் நடைபெறக்கூடிய முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் சுடச்சுட உங்களுக்காக!
தூத்துக்குடி செய்திகள்
தொடர் மழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் சாலையில் வெள்ள நீர் பெருக்குடுத்து ஓடுவதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் இன்றும் நாளையும் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை […]
மேலும் படிக்க
தெப்பக்குளம் போல காட்சியளிக்கும் தூத்துக்குடி பேருந்து நிலையம்!
தூத்துக்குடி மாநகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக எதிரே உள்ள மைதானத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது சில நாட்களாக மாநகரில் பரவலாக மழை பெய்து வருவதால் மழை நீர் பேருந்து நிலையத்திற்குள் புகுந்து தெப்பக்குளம் போல காட்சியளிக்கிறது. தேங்கியுள்ள மழை நீரோடு கழிவு நீரும் கலந்து வருவதால் பேருந்து நிலையம் முழுவதும் சுகாதார கேடு நிலவி வரும் நிலையில், பேருந்து நிலையத்திற்கு […]
மேலும் படிக்க
தூத்துக்குடியில் மழையின் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தமிழக முதல்வர் ஆய்வு!
தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த மழை காரணமாக மாநகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் நேற்று தூத்துக்குடியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரையண்ட் நகர் பகுதியில் சாலையில் தேங்கி கிடந்த மழை நீரில் நடந்து சென்று பார்வையிட்ட அவர், மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படியில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் படிக்க
மேலும் படிக்க
தென்காசி செய்திகள்
தென்காசி அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு!
தென்காசி மாவட்டம்., வாசுதேவநல்லூர் அருகே சாலை அமைக்கும் பணிக்காக மண் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கு அடியில் இருந்து உருளை வடிவ கற்கள், பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பால் செய்யப்பட்ட வில், குத்தீட்டி, வாள், கத்தி, செம்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் என ஏராளமான பழங்கால பொருட்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
20 மாதங்களுக்கு பிறகு தென்காசியில் இருந்து கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்து துவக்கம்!
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகம் மற்றும் கேரளா இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்துகளின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் இருபது மாதங்களுக்கு பின்னர் தென்காசியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு நேற்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன. இதனை அடுத்து கேரளா அரசு போக்குவரத்துத்துறை சார்பாகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பாகவும் இரு மாநிலங்களுக்கும்  இடையில் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க
குற்றாலம் அருவி பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்!
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவி பகுதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு, கோபால சுந்தர ராஜ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குற்றாலம் அருவில் குளிக்க அனுமதி கிடைப்பது எப்போது? என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அதுபற்றி இன்னும் எந்தவிதமான அறிவிப்புகளும் தமிழக அரசு சார்பாக வெளியிடப்படவில்லை என தெரிவித்தார்.]
மேலும் படிக்க
மேலும் படிக்க
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பேருந்துகள் இயக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சுமார் இருபது மாதங்களுக்கு பின்னர் பேருந்து சேவைகள் நேற்று துவங்கியது. கொரோனா நோய்த்தொற்று பரவலை அடுத்து இரண்டு மாநிலங்களுக்குமான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் தமிழக அரசு பேருந்துகளும், கேரளா அரசு பேருந்துகளும் இயங்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று காலை முதலே பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
மேலும் படிக்க
கன்னியாகுமரியில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முடக்கம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக இந்த மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் குழித்துறை ஆற்றிலும், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள தரைமட்ட பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் மலைப்பகுதிகளில் உள்ள குற்றியாறு, கல்லாறு, மாங்காமலை உள்ளிட்ட பல கிராமங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் மலைப்பகுதிகளில் வாழும் […]
மேலும் படிக்க
நாகர்கோவிலில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை!
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரத்தில் 5 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மாநகர் முழுவதும் மாநகராட்சி சார்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் உள்ள வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதை போல கோட்டாறு ரயில் நிலையம் மற்றும் வடசேரி பேருந்து நிலையம் […]
மேலும் படிக்க
மேலும் படிக்க
விருதுநகர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிடமடைந்ததை அடுத்து மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. மாநிலத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் எல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளமும் வேகமாக நிரம்பி, தற்போது மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
மேலும் படிக்க
திருத்தங்கல்லில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் நகராட்சியும், சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனை அடுத்து சிவகாசி மாநகராட்சியின் புதிய ஆணையராக பதிவியேற்றுக்கொண்ட திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று திருத்தங்கல் பகுதிக்கு நேரில் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் பலரும் தங்கள் பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி, வாருகால் வசதி, கழிப்பிட வசதி வேண்டும் என […]
மேலும் படிக்க
அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற பட்டாபிராமர் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்ற நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் அருப்புக்கோட்டை, புளியம்பட்டி, பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் படிக்க
மேலும் படிக்க

திருநெல்வேலி அன்றாட நிகழ்வுகள்

திருநெல்வேலி மாநகரம், மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள், கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், அரசியல் நிகழ்வுகள், ஆன்மீக நிகழ்வுகள் போன்ற அனைத்து தகவல்களையும் பற்றி இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

முந்தைய செய்திகள்

அரசு அருங்காட்சியகம் சார்பில் காகித கலைப் பயிற்சி...!
திருநெல்வேலியில் உள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் காகித கலைப் பயிற்சி இன்று நடத்தப்படுகிறது. காகிதங்கள் மூலம் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட உருவங்களை உருவாக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக செலவிட இது போன்ற பயிற்சிகள் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். மேலும் ஜூம் செயலி மூலம் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்து […]
மேலும் படிக்க
திருநெல்வேலியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க குவியும் மக்கள்..!
கொரோனா நோய் தற்போது தீவிரமாக பரவி வரும் நிலையில், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில்  ரெம்டெசிவிர் என்னும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் இந்த மருந்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்து செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.   இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகள் மூலம் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய […]
மேலும் படிக்க
திருநெல்வேலி மாவட்டத்தில் இ-பதிவு முறை அமலுக்கு வந்தது.
கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் மேற்கொள்வதற்கும் இ-பதிவு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலும் நேற்று முதல் இந்த இ-பதிவு நடைமுறை […]
மேலும் படிக்க
வீடுகளுக்கே சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்! திருநெல்வேலி மாநகராட்சி அசத்தல்!
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பெருகி வரும் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் திரு.கண்ணன் அவர்கள்  உத்தரவின் பேரில், பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் தினமும் ஆட்டோக்கள் மூலம் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற தொடக்க […]
மேலும் படிக்க
பாளையங்கோட்டையில் காவலர்கள் குடும்பத்திற்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது
பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யும், மாநகர போலீஸ் கமிஷனருமான திரு. பிரவின்குமார் அபிநபு அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் மட்டுமே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும், எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடைய வேண்டும் என்று உரையாற்றினார். இந்த சிறப்பு முகாமில் நெல்லை […]
மேலும் படிக்க
திருநெல்வேலி கால்வாயில் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு!
திருநெல்வேலி மாவட்ட அணைகளில் இருந்து கடந்த 01/06/2021 ஆம் தேதி முதல், கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பாய்ந்தோடி, தடுப்பணைகள் மூலமாக திறக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் வழியாக சென்று விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை அளிக்கிறது. இதனால் தற்போது தாமிரபரணியில் உள்ள தடுப்பணை வழியாக ஒவ்வொரு கால்வாயிலும் வரிசையாக தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி நேற்று தாமிரபரணியில் உள்ள சுத்தமல்லி தடுப்பணையில் […]
மேலும் படிக்க
1 2 3 28
மேலும் படிக்க
உதவிக்கு அழைக்க
 • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
 • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
 • போக்குவரத்து காவல்துறை : 103
 • மருத்துவ உதவி எண் : 104
 • தீயணைப்பு துறை : 101
 • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
 • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
 • குழந்தைகள் நலம் : 1098
 • பாலியல் துன்புறுத்தல் : 1091
 • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
திருநெல்வேலி செய்திகளின் தொகுப்பு
 • நிகழ்வுகள்!
 • முக்கிய செய்திகள்!
 • முக்கிய சம்பவங்கள்!
 • மாநகரில் இன்று!
 • அணைகளின் நீர் இருப்பு விவரம்!
 • வானிலை நிலவரம்!
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top magnifiercrossarrow-right linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram