நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் வழங்கிய நூதன தண்டனை.

Different punishment for curfew rules violatersகொரோனா நோய் தொற்று தற்போது பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாநகரில் விதிமுறைகளை மீறி மக்கள் இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் சாலைகளில் பயணித்து வருகிறார்கள். ஊரடங்கை கண்காணிக்க மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தற்காலிக சோதனை சாவடிகள் ஏற்படுத்தி மக்களை கண்காணித்து வருகிறார்கள். எனினும் நேற்றும் சாலைகளில் பயணிக்கும் மக்கள் கூட்டம் அதிக அளவு காணப்பட்டது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர காவல்துறையினர் நேற்று அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் பயணம் மேற்கொண்ட நபர்களை தடுத்து நிறுத்தி அவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்தும், தேவையில்லாமல் சாலையில் பயணம் செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைத்தும்,  எழுத்துபூர்வமாக உறுதிமொழி எழுத வைத்தும் அவர்களுக்கு நூதன தண்டனைகள் வழங்கி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று முதல் மாநகர சாலைகளில் அத்தியாவசிய தேவையின்றி பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!