நெல்லை சமையல் குறிப்பு

உளுந்தங்களி

முன்னர் வாழ்ந்த நம் முன்னோர் இயற்கையுடன் ஒன்றி இருந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இயற்கை முறையில் விளைந்த பொருட்களை கொண்டு, உணவினை சமைத்து தங்கள் உடல் நலனை பேணி வந்தார்கள். அந்த வகையில் அவர்களின் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருந்தது. அவர்களின் வாழ்க்கை முறையில் வாரத்திற்கு ஒரு நாள் உளுந்தங்களி உணவாக இடம்பெறும். பொதுவாக கருப்பு உளுந்தில் மிகுதியான சத்துக்கள் இருக்கின்றன. உளுந்தில் உள்ள சத்துக்கள் நம் உடலில் …

Read More »

இடிசாம்பார்

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது இடிசாம்பார். இது சாதத்துக்கு ஊத்தி சாப்பிடும் ஒரு குழம்பு வகை. சாதாரண சாம்பாருக்கும், இடி சாம்பாருக்கும் வித்தியாசம் உண்டு. குறிப்பா திருநெல்வேலி பகுதியில் தைப்பொங்கல், ஆவணி பொங்கல் மட்டும் விசேஷ நாட்களில் பிரத்யேகமாக இந்த இடி சாம்பார் செய்யப்படும். இந்த இடிசாம்பார் வைக்கிறதுக்காக பிரத்யேகமாக அன்னைக்கு புதுசாவே சேர்மானங்கள் கொண்டு பொடி இடிக்கப்படும். அக்காலங்களில் இந்த பொடியை உரலில் இட்டு இடிப்பார்கள். …

Read More »

அவியல்

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது அவியல். இது ஒரு தொடுகறி வகை. இந்த அவியலை சாதத்துக்கு, அடை தோசைக்கு, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். திருநெல்வேலியில அவியலுக்கு சிறப்பு இடம் உண்டு. இங்கு நடைபெறும் கல்யாணம், மற்றும் விசேஷ வீடுகளில் மதிய விருந்தில் அவியல் முக்கிய இடம் பெறும். சமையலுக்கு அமர்த்தும் சமையல்காரர் கைதேர்ந்தவர் என்பதை நீருபிக்க அவியல் ருசிக்க வேண்டும். மேலும் இந்த அவியலை வாழைஇலை …

Read More »

கூட்டாஞ்சோறு

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது கூட்டாஞ்சோறு. திருநெல்வேலியின் மிகவும் பிரபலமான மதிய உணவுகளுள் ஒன்று இந்த கூட்டாஞ்சோறு. இது பெரும்பாலும் வீட்டில் சமைக்கப்படும் உணவு, உணவகங்களில் கிடைப்பது அரிது. திருநெல்வேலி மற்றும் சுத்துவட்டாரத்துல (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி) தேரோட்டம், கோவில் கொடை, திருவிழானு வந்து, வீட்டுக்கு சொந்தங்காரங்க வந்துட்டா பெரும்பாலும் கூட்டாஞ்சோறு தான் மதிய உணவாக இருக்கும். அதே மாதிரி குடும்பத்தோட கிளம்பி திருச்செந்தூர், சங்கரன்கோவில், குற்றாலம், …

Read More »

பருப்பு வடை மோர்க்குழம்பு

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்: பருப்புவடை_மோர்க்குழம்பு. வெண்டைக்காய்_மோர்க்குழம்பு. தடியங்காய்_மோர்க்குழம்பு. சேப்பங்கிழங்கு_மோர்க்குழம்பு. திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது மோர்க்குழம்பு. இந்த மோர்க்குழம்பு சாதத்துக்கு ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும். திருநெல்வேலியில செய்யுற மோர்க்குழம்பு ஒருவித சுவையோட இருக்கும்னா, நம்ம பக்கத்து ஊரான நாகர்கோவில் நாஞ்சில் நாட்டு மோர்க்குழம்பு ஒருவித சுவையோட இருக்கும். நாஞ்சில் நாட்டுல இதுக்கு புளி சேரி னு பெயர். நாஞ்சில் நாட்டு கல்யாண வீடுகளில் மோர்க்குழம்பு முக்கிய …

Read More »

கடைஞ்ச கீரை

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது கடைஞ்ச கீரை. இதற்கு பெரும்பாலும் இங்கு கிடைக்குற அரைக்கீரை தான் பயன்படுத்தப்படும். கீரைனாலே திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதியில அரைக்கீரை தான் பிரசித்தம். சுற்றுபகுதி கிராமங்களில் இருந்து விடியாக்காலமே கீரை மூடைகள் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகர் பகுதிகளில் வந்து இறங்கிவிடும். பாளையங்கோட்டையில தெற்கு பஜார்ல லூர்துநாதன் சிலை முன்னாடியும், வடக்கு பஜார்ல காவலர் குடியிருப்பு முன்னாடியும் மொத்தமா கீரை மூடைகள் வந்து இறங்க, …

Read More »

வாழை இலை துவையல்

எனக்கு சமையல்ல அதிக ஈடுபாடு உண்டு. சமைக்க கத்துக்கிட்டு ஒரு ஏழு வருஷமாச்சு. இந்த ஏழு வருஷத்துல எங்க ஆச்சியோட, சின்னாச்சியோட, சித்தியோட, பெரியம்மாவோட கைப்பக்குவத்துல நிறைய சமையல் விஷயங்களை கத்து வைச்சிருக்கேன். எங்க வீட்டில வாழை இலை பயன்பாடு அதிகமா உண்டு. தினமும் வாழை இலைல சாப்பிடுறதே வழக்கம். இது போக வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ என வாழையின் அனைத்து பகுதிகளையும் உணவுல சேர்த்துக்குவோம். வாழை இலையை சாப்பிடுறதுக்கு …

Read More »

சொதி குழம்பு

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது சொதி குழம்பு. சொதி குழம்பு சாதத்துக்கு, இடியாப்பத்துக்கு, ஆப்பத்துக்கு ஊத்தி சாப்பிட சுவையாக இருக்கும். திருநெல்வேலினாலே சொதி சாப்பாடு ரொம்ப பிரசித்தம். திருநெல்வேலில இருக்குற முக்கிய சைவ உணவகங்களில் பெரும்பாலும் வெள்ளிக்கிழமையானா மதியம் சொதி சாப்பாடு கிடைக்கும். சொதி வைச்சா அதுக்கு தொட்டுக்க கூடவே இஞ்சி பச்சடி, உருளைக்கிழங்கு காரக்கறி, உருளைக்கிழங்கு உப்பேறி இதெல்லாம் கண்டிப்பா இருக்கணுங்கிறது நாக்குருசி கண்டவர்களின் விதிமுறை. …

Read More »

கத்திரிக்காய் கிச்சடி

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பார்க்கப்போறது கத்திரிக்காய் கிச்சடி. இது இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளும் சட்னி வகைகளுள் ஒன்று. பொதுவா எங்க வீடுகள்ல எல்லாம் ஒரு நாளைக்கு தோசை மாவு அரைச்சாங்கனா மறுநாள் இட்லி, அதற்கு மறுநாள் தோசை தான் காலை உணவாக இருக்கும். ஆக பெரும்பாலும் காலை உணவாக இட்லி, தோசையே இருக்கும். ஆனா இந்த இட்லிக்கு மட்டும் தொட்டுக்க சாம்போரோ, கத்திரிக்காய் கிச்சடியோ, தக்காளி கிச்சடியோ …

Read More »

புளியில்லா குழம்பு

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது புளியிலா குழம்பு. இந்த குழம்புக்கு புளி சேர்ப்பதில்லை. புளிப்புச்சுவையும் இருக்காது. அதனால் புளியில்லா குழம்பு என்று பெயர். பத்தியம் இருப்பவர்கள் பெரும்பாலும் புளி சேர்க்கக்கூடாது, என்பதால் பத்தியக்காலத்தில் இக்குழம்பு சேர்க்கப்படும். பத்தியத்திற்காக செய்யப்படும் போது முருங்கைக்கீரை மற்றும் தாளிசம் செய்வது தவிர்த்து செய்வார்கள். புளியில்லா குழம்பு ஒரு வகை தனிருசியாகத்தான் இருக்கும். இதில் முருங்கைக்கீரை சேர்ப்பதால் உடம்புக்கும் நல்லது. இதனை சாதத்திற்கு …

Read More »

வாழைக்காய் புட்டு

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது வாழைக்காய் புட்டு. இது சாப்பாடுக்கு தொட்டுக்கொள்ளும் ஒரு வகை தொடுகறி. (தொடுகறி என்றால் பொரியல்) இந்த வாழைக்காய் புட்டு தொடுகறியா மட்டும் இல்லாம அப்படியே கூட சாப்பிடலாம். அவ்வளவு ருசியா இருக்கும். வாழைக்காய் புட்டு வீட்டில செஞ்சா முதல் ஆளா உக்காந்து ஒரு புடி புடிச்சிருவேன். சரி இப்போ வாழைக்காய் புட்டு செய்முறையை பார்ப்போமா? தேவையான பொருட்கள்: நல்ல பெரிய நாட்டு …

Read More »

புளித்தண்ணி

திருநெல்வேலி சிறப்பு உணவுகள்ல இன்னைக்கு நாம பார்க்கப்போறது புளித்தண்ணி. இது சாதத்துக்கு ஊத்தி பிசைஞ்சு சாப்பிடும் ஒரு வகை குழம்பு. இந்த புளித்தண்ணிய செய்ய ஐந்து நிமிஷம் தான் ஆகும். அதனால இந்த குழம்பை அவசரகாலத்துக்கு உடனடியா வைச்சுரலாம். வீட்டுல எங்கேயாவது திடீர்னு வெளியபோயிட்டு வந்து சமைக்க நேரம் ஆயிட்டுன்னா, உடனே ஒரு பானையில உலை வைச்சு ஒரு பக்கம் சோறு வடிச்சா, அத பொங்கி இறக்குறதுக்குள்ள இன்னொரு பக்கம் …

Read More »