நெல்லை மாவட்டத்தில் உள்ள 4.59 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம்!

Author
June 12, 2021
Est. Reading: 0 minutes
No Comments

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நிவாரணமாக ரூபாய் 4000 நிதி உதவியும், 14 பொருட்கள் கொண்ட பொருட்கள் தொகுப்பு வழங்குவதாகவும்  அறிவித்திருந்தது. இதன்படி முதற்கட்டமாக ரூபாய் 2000 சென்ற மாதம் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக ரூபாய் 2000 நிவாரணத் தொகையும், 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வரும் 15/06/2021 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் எனவும் அதற்குரிய டோக்கன் வீடுகளுக்கே வந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 59 ஆயிரத்து 538 அரிசி கார்டுகளுக்கு நேற்று முதல் நிவாரண பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி பொது மக்கள் வரும் 15/06/2021 ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
தற்போதைய பதிவுகள்
1 2 3 21

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2021 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram