நெல்லை மாவட்டத்தில் நுங்கு விற்பனை அமோகம்!

Palm fruit salesகோடை காலத்தில் இயற்கை தரும் வரப்பிரசாதமாக நமக்கு பனை மரங்கள் மூலம் கிடைக்கக்கூடியது பதநீர் மற்றும் நுங்கு. இந்த பனை பொருட்கள்  கோடை கால வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்து நமக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகின்றன. நெல்லை மாவட்டத்தில் பனைமரங்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் இங்கு பொதுவாக கோடை கால துவக்கத்தில் இருந்தே பதநீர் மற்றும் நுங்கு விற்பனை களைகட்டத் துவங்கும்.  இந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நுங்கு விற்பனை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த 2  நாட்களாக கடைகள் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலையோரம் நுங்கு விற்பனையும்  சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இதனால் பனை தொழிலாளர்களும் உற்சாகமாக நுங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் தடுப்பூசி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக இன்று முதல் கூடுதல் மையம் திறக்கப்படுகிறது. தினமும் தடுப்பூசி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.