நெல்லை மாநகர புதிய சட்டம் ஒழுங்கு துணை காவல்துறை ஆணையாளர் பதவியேற்பு!

Mr Rajarajan IPSநெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை காவல்துறை ஆணையாளராக தமிழக அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட திரு.ராஜராஜன் அவர்கள் நேற்று மதியம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது பதவியேற்றுக்கொண்ட திரு.ராஜராஜன் அவர்கள் ஏற்கனவே நெல்லையில் உள்ள தாழையூத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், நெல்லை மாநகர துணை காவல்துறை ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை காவல்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த திரு.சீனிவாசன் அவர்கள் தமிழக அரசால் திருவாரூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழக அரசு அந்த பணிக்கு சிவகங்கை மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றிய திரு.ராஜராஜன் அவர்களை நியமித்து ஆணை பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவுப்படி, நேற்று நெல்லையில் பதவியேற்றுக்கொண்ட திரு.ராஜராஜன் அவர்கள், நெல்லை மாநகரம் எனக்கு ஏற்கனவே பழக்கமான இடம், இங்குள்ள ரவுடிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும், கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் கண்காணிக்கப்படும், போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பொது மக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் தடுப்பூசி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக இன்று முதல் கூடுதல் மையம் திறக்கப்படுகிறது. தினமும் தடுப்பூசி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.