நெல்லை கோயில்கள்

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும். இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது.  தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்: 1. பக்த ஸ்தலம்: சிவசைலம்  ஸ்ரீ சிவசைலப்பர் திருக்கோவில். 2. …

Read More »

திருநெல்வேலி அருகே உள்ள தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத ஸ்தலங்கள்!

பொதுவாக பஞ்ச பூத ஸ்தலங்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது சிதம்பரம், திருவானைக்காவல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து ஸ்தலங்கள் ஆகும். இது போல தென்பாண்டி நாடு என்று சிறப்பிக்கப்படும் திருநெல்வேலி ஜில்லா பகுதியிலும் பஞ்ச பூத ஸ்தலங்கள் அமையப்பெற்றுள்ளன. தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத ஸ்தலங்கள்: 1. மண் ஸ்தலம்: சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மை உடனுறை ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி திருக்கோவில். 2. அக்னி ஸ்தலம்: …

Read More »

திருநெல்வேலி அருகே உள்ள பஞ்ச குரோச ஸ்தலங்கள்!

திருநெல்வேலி அருகிலுள்ள ஐந்து சிவாலயங்கள் பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முற்காலத்தில் தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, சிவபெருமான் அம்பெய்தி உடைத்தார். அந்த அமுதம் பூலோகத்தில் பல்வேறு இடங்களில் சிதறி ஐந்து குரோசம் தூரம் வரையில் பரவி ஐந்து ஸ்தலங்களை உண்டாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும். ஆக ஐந்து குரோச தூரத்தில் அமையப்பெற்றுள்ள கோவில்கள் என்பதால் இந்த ஐந்து சிவாலயங்களும் “பஞ்ச …

Read More »

திருநெல்வேலி அருகே உள்ள பஞ்ச குரு ஸ்தலங்கள்!

திருநெல்வேலி அருகே உள்ள ஐந்து சிவாலயங்கள் பஞ்ச குரு ஸ்தலங்களாக போற்றப்படுகின்றன. இந்த ஐந்து திருக்கோவில்களில் காட்சிதரும் குருவாகிய ஸ்ரீ தட்சிணாமுர்த்தியை ஒரே நாளில் வழிபடுவது சிறப்பு பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது.  பஞ்ச குரு ஸ்தலங்கள்:  1. திருப்புடைமருதூர் – ஸ்ரீ கோமதி அம்மை உடனுறை ஸ்ரீ நாறும்பூநாத சுவாமி திருக்கோவில். 2. அத்தாளநல்லூர் – ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ மூன்றீஸ்வரமுடையார் திருக்கோவில். 3. தென்திருபுவனம் – …

Read More »

சேரன்மகாதேவி மிளகு பிள்ளையார் சிறப்பு!

திருநெல்வேலி மாவட்டம்., சேரன்மகாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் திருக்கோவில். கன்னடியன் கால்வாயின் கரையில் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலில் உள்ள விநாயகரின் உடலில் மிளகை அரைத்து தேய்த்து, குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து, அந்த புனித தண்ணீரை கால்வாய்க்குள் விழும்படி செய்தால், மழை பொழிந்து தண்ணீர் செழிக்கும் என்பது ஐதீகம். எனவே மழை பொய்த்து போகும் காலத்தில் இந்த விநாயகருக்கு மிளகு அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்யும் வழக்கம் இன்றும் நடைமுறையில் …

Read More »

வசந்த உற்சவம் காண தனது பிறந்த ஊருக்கு எழுந்தருளும் பரமகல்யாணி அம்மை!

திருநெல்வேலி அருகே அமையப்பெற்றுள்ளது சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ சிவசைலநாதர் திருக்கோவில். கடனா நதிக்கரையில் மேற்குநோக்கி அமையப்பெற்றுள்ள இந்த சிவாலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் கருவறையில் காட்சிதரும் பரமகல்யாணி அம்மை திருமேனி, இந்த கோவில் அமையப்பெற்றுள்ள பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆம்பூர் என்னும் ஊரின் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது. எனவே ஆம்பூர் பரமகல்யாணி அம்மையின் பிறந்த …

Read More »

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் திருவிழாக்கால பீமன்.

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு வருடம்தோறும் நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும் காலங்களில் எழுந்தருள்வதற்காக மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்ட பீமன் திருமேனி இங்கு உள்ளது. இந்த பிரம்மாண்ட திருமேனியை ஆனிப்பெருந்திருவிழா நடைபெறும் காலங்களில் மட்டுமே திருக்கோவில் ரத வீதிகளில் நாம் தரிசிக்க முடியும் என்பது சிறப்பம்சம் ஆகும்.

Read More »

ஆற்றில் கிடைத்த அற்புதச்செல்வி!

திருநெல்வேலி மாநகரில் உள்ள வண்ணாரப்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமையப்பெற்றுள்ளது பேராத்துச் செல்வி அம்மன் திருக்கோவில். வடக்கு நோக்கி நோக்கி அமையப்பெற்றுள்ள இந்த கோவிலின் கருவறையில் அம்மன் பேருருவாக அருள்பாலிக்கிறாள். முற்காலத்தில் இங்கு பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றுக்குள் இருந்து கிடைக்க பெற்ற அம்மன் என்பதால் இவளுக்கு பேராத்துச் செல்வி அம்மன் என்று பெயர். அதாவது தாமிரபரணி என்னும் பெரிய ஆற்றில் இருந்து கிடைக்கப்பட்டதால் “பெரிய ஆற்றுச் செல்வி” என்று அழைக்கப்பட்டு பின்னர் …

Read More »

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பஞ்ச தட்சிணாமூர்த்திகள்!

திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில். இந்த கோவிலில் ஐந்து தட்சிணாமூர்த்தி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளது. அவைகள்., 1. சுவாமி நெல்லையப்பர் சன்னதி கோஷ்டத்தில் உள்ள தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி. 2. சுவாமி நெல்லையப்பர் கோவில் தெற்கு பெரிய பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி. 3. திருக்கோவில் பொற்றாமரை குளத்தின் மேற்கு கரையில் உள்ள கால்மாற்றி அமர்ந்த தட்சிணாமூர்த்தி. 4. சுவாமி நெல்லையப்பர் …

Read More »

ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் ஓசை கூட “ஓம்” என்று ஒலிக்கும் அதிசயம்!

ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடாக திகழும் கோவில் திருச்செந்தூர். கடற்கரையில் கம்பீரமாக அமையப்பெற்றுள்ள இந்த திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும். இந்த கோவிலில் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் ஓசை கூட “ஓம்” என்று ஒலிக்கும் அதிசயத்தை நாம் கேட்கலாம்! ஆம்! இந்த கோவிலில் மூலவர் சன்னதிக்கு நேர் எதிரே, கிழக்கே செப்பு கொடிமரம் அருகே பிரகார சுவற்றில் ஒரு செவ்வக  வடிவ துவாரம் இருக்கும். இந்த …

Read More »

மதில் மேல் அமர்ந்து அருள்பாலிக்கும் சங்கிலிபூதத்தார்!

திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கிலிபூதத்தார் வழிபாடு மிகவும் பிரசித்தம். இங்கு பல சைவ, வைணவ கோவில்களின் காவல் தெய்வமாகவும், தேரடி காவல் தெய்வமாகவும் சங்கிலிபூதத்தார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருநெல்வேலி மாநகரில் உள்ள ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவிலின் காவல் தெய்வமாக விளங்கும் இந்த சங்கிலிபூதத்தார், திருக்கோவில் மதில் சுவற்றின் மீது கம்பீரமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வெளிப்பக்க தென்கிழக்கு மூலையில் …

Read More »

பாளையங்கோட்டை சிவன் கோவில் சண்முகர் சிறப்பு!

பாளையங்கோட்டை நகரில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ கோமதி அம்பாள் உடனுறை ஸ்ரீ திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலில் அமையப்பெற்றுள்ள சண்முகர் சன்னதியின் வரலாறு தனிச்சிறப்பு பெற்றதாகும். முற்காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள தெய்வத்திருமேனிகளை டச்சுக்காரர்கள் கொள்ளையடித்து கடல் வழியாக கொண்டு சென்றனர். அப்போது முருகப்பெருமான் திருவிளையாடலால் பெரும்புயல் காற்று வீச, பயந்து போன கொள்ளையர்கள் அந்த திருமேனிகளை கடலுக்குள் போட்டுவிட்டு தப்பிச்ச சென்றனர். இதற்குள் திருச்செந்தூர் கோவிலில் இருந்து காணாமல் …

Read More »