நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையதளம் மூலம் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்!

online classes for teachersநெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி ஆகியவை இணைந்து ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை இணையதளம் வாயிலாக நடத்த உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பு அருங்காட்சியகமும், அரும்பணிகளும் என்ற தலைப்பில் நாளை 11/06/2021 ஆம் தேதி அன்று தொடங்கி வரும் 17/06/2021 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. இதில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். ஏழு நாட்கள் இணையதளம் மூலம் நடைபெறும் இந்த பயிற்சியில் தொடர்ந்து பங்குபெறும் நபர்களுக்கு மின் சான்றிதழ்  (E-Certificate) வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9444973246, 9865409524.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.