பெருமாளுக்குரிய வைணவ ஸ்தலங்களில் 108 திவ்யதேசங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ்நாட்டில் நவதிருப்பதி என்று புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்கள் நெல்லை பகுதியை சுற்றி அமைந்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நவதிருப்பதி கோவில்கள் அனைத்தும் தென்பகுதி ஸ்தலங்களாக போற்றப்படுகின்றன. நவதிருப்பதி ஸ்தலங்கள் அனைத்தும் ஆழ்வார்களால் பாடப்பட்டுள்ளது. இதனை ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் என்று கூறுவார்கள். இவை அனைத்தும் 108 வைணவ திவ்ய தேசங்களில் அடங்கும். இந்தக் கோவில்கள் அனைத்தையும் இரண்டே நாட்களில் தரிசிக்க திருநெல்வேலியில் இருந்து செல்லலாம்.
தமிழ்நாட்டின் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள வைணவத் தலங்களே நவதிருப்பதி கோவில்கள் (Nava Tirupathi Temples ) என்று போற்றப்படுகிறது.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக- நரசிம்ஹோ
பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச- வாமனோ
விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச -கேதுர்ம் நஸதாரய்ய
யோகசாந்யேயிசேகர.
எனும் ஸ்லோகத்தின் அடிப்படையில் நவ திருப்பதி களும் மற்றும் தசாவதாரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. ஸ்ரீவைகுண்டம் திருக்கோவில் - திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
( ஸ்ரீ ராமாவதாரம்) திருத்தலத்திற்கான நவக்கிரகம் - சூரியன்
2. விஜயாசனப் பெருமாள்( வரகுணமங்கை) திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ( Nava Thirupathi temples in Thoothukudi )
(ஸ்ரீ கிருஷ்ணாவதாரம ) திருத்தலத்திற்கான நவக்கிரகம்- சந்திரன்
3. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
(ஸ்ரீ கல்கியவதாரம் ) நவக்கிரகம்- செவ்வாய்
4. திருப்புளிங்குடி காசினவேந்தர்பெருமாள் கோவில் திருநெல்வேலிக்கு போகும் வழியில் திருப்புளியங்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது.
( ஸ்ரீ நரசிம்மவதாரம் ) திருத்தலத்திற்கான நவக்கிரகம் -புதன்
5. ஆதிநாதர் ஆழ்வார் திருநகரி கோவில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் அமைந்துள்ளது.
( ஸ்ரீ வாமனவதாரம் ) திருத்தலத்திற்கான நவக்கிரகம் - குரு
6. தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில் திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் போகும் வழியில் உள்ளது.
(ஸ்ரீ பரசுராமாவதாரம் ) திருத்தலத்திற்கான நவக்கிரகம்- சுக்கிரன்.
7. திருக்குளந்தை வேங்கட வாணன் திருக்கோவில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் இருக்கிறது.
( ஸ்ரீ கூர்மவதாரம் ) திருத்தலத்திற்கான நவக்கிரகம் - சனி
8. திருத்தொலைவில்லி மங்களம் இரட்டை திருப்பதி கோவில் ஆழ்வார்திருநகரிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
(ஸ்ரீ வராகவதாரம் ) திருத்தலத்திற்கான நவக்கிரகம்- ராகு
9 . திருத்தோலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் கோவில் ஆழ்வார்திருநகரியின் அருகே அமைந்துள்ளது.
(ஸ்ரீ மச்சாவதாரம் ) திருத்தலத்திற்கான நவக்கிரகம் - கேது