மண் பானை மற்றும் மண் பாத்திரங்கள் விற்பனை அமோகம்..!

Mud Potsதிருநெல்வேலி மாநகர பகுதியில் தற்போது கோடை வெயில் தற்போது கடுமையாக இருக்கிறது. அதனால் ஏற்படும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள். தற்போது நிலவி வரும் கொரோனா கால நெருக்கடி நிலை காரணமாக, வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டியை  கூட பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் இருந்து வருகிறார்கள். இதனால் வெப்பத்தை சமாளிக்க மக்கள் அனைவரும் பல்வேறு வழிகளை தேடி வருகிறார்கள். தற்போது மாநகரில் உள்ள மார்க்கெட் பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ள மண் பானை மற்றும் மண் பாத்திரங்கள் விரும்பி வாங்கிச் சென்றார்கள். மண்பானையில் தண்ணீர் வைத்து அருந்தினால் உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்பதால் கோடை காலத்தை சமாளிக்க மக்கள் அனைவரும் மண் பானைகளை வாங்க ஆர்வம் காட்டினார்கள். இன்று முதல் கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு தீவிரப்படுத்த படுகிறது.எனவே கடைகள் திறப்பது தாமதமாகும் என்பதால் நேற்று ஒரே நாளில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால்  மண் பானை மற்றும் மண் பாத்திரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது

About Lakshmi Priyanka

Check Also

இன்று உலக குடும்ப தினம்.

குடும்பம் என்பது கூடி வாழும் அமைப்பு. நம் பாரத நாட்டில் இந்த குடும்ப அமைப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நம் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.