மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் !

Manimoorthiswaram kodimaramதிருநெல்வேலி மாநகரின் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ளது, மணிமூர்த்தீஸ்வரம் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோவில். ஆசியாவின் மிகப்பெரிய தனிப்பெரும் விநாயகர் கோவில் என்ற சிறப்பை பெற்ற இந்த கோவிலின் கருவறையில் பிரதான மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் விநாயகர், தனது மடியில் தேவியை இருத்திய கோலத்தில் காட்சித்தருவது சிறப்பம்சம் ஆகும்.

பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி போன்ற கோவில்களில் கூட பரிவார மூர்த்தியாக மட்டுமே காட்சிதரும் விநாயகர், இந்த ஸ்தலத்தில் ராஜகோபுரம், கொடிமரத்துடன் கூடிய தனிப்பெருங்கோவிலின் பிரதான மூலவராக விளங்குகிறார். எனவே தான் இது ஆசியாவிலேயே பெரிய தனிப்பெரும் விநாயகர் கோவில் என்ற பெருமையை பெறுகிறது. இத்தனை பெருமை வாய்ந்த மணிமூர்த்தீஸ்வரம் பிள்ளையாரை நாமும் பணிந்து வணங்கி பேரின்ப பெருவாழ்வு பெறுவோமாக !

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் திருவிழாக்கால பீமன்.

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு வருடம்தோறும் நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.