மாவட்ட அறிவியல் மையம் சார்பில் ஆன்லைன் வீடியோ போட்டி.!

District Science Centreதிருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பாக மாணவர்களுக்கு ஆன்லைன் வீடியோ போட்டி நடத்தப்படுகிறது. வரும் மே மாதம் 18 ஆம் தேதி அன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பாகச் சர்வதேச அருங்காட்சியக தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பள்ளியில் பயிலும் மாணவர்கள், மாணவியர்களை உற்சாகப்படுத்தும் வகையில்  “எனது தனிப்பட்ட தொல்பொருள் சேகரிப்பு” என்ற தலைப்பில்  இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்கள் பெயர், படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் தங்களை பற்றிய சிறு தகவல்களை https://forms.gle/sJkoeGQwrEkY7SL9A

 என்ற இணையதள முகவரியில் வரும் மே மாதம் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பங்கு பெறும் போட்டியாளர்கள் தங்களின் தொல்பொருட்கள் சம்மந்தப்பட்ட படைப்புகளை 10MB க்கு மிகாமலும், 3 நிமிடங்களுக்குள் இருக்கும் வகையிலும் ஒரு வீடியோவாகப் பதிவு செய்து மேற்கண்ட இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதிலிருந்து சிறந்த வீடியோ பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் மே மாதம் 18 ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் ஆன்லைன் மூலமாகப் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படும் என்ற தகவலை மாவட்ட அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.