கோடை கால அக்னி நட்சத்திரம் இன்று துவங்குகிறது.!

Agni Natchathiramஇன்று முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கோடை கால கத்திரி வெயில் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த அக்னி வெயில் இம்மாதம் வரும் 29-ம் தேதிவரை நீடிக்கிறது. ஏற்கனவே பல நாட்களாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது அக்னி வெயிலும் தொடங்க உள்ளது. ஏற்கனவே கொரோனா நோய் தொற்றுக் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். முடிந்த வரை பகல் பொழுதில் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிற்குள் இருப்பது நன்மை தரும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளான பதநீர், இளநீர், நுங்கு, சர்பத், எலுமிச்சை சாறு போன்ற நீராகாரங்களை உட்கொள்வதன் மூலம் நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். மக்கள் அனைவரும் இந்த அக்னி வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். எனவே அக்னி வெயிலை சமாளிக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவோமாக.!

About Lakshmi Priyanka

Avatar

Check Also

பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாறிவரும் நெல்லை மக்கள்…!

கொரோனா என்னும் நோய் தொற்று தற்போது பரவலாக பெருகி வரும் நிலையில் மக்கள் அனைவரும் பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாறி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.