கீழப்பாவூர் பதினாறு கரங்கள் நரசிம்மர்.

Keelapaavoor Narasimhar templeஇன்று வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் “நரசிம்மர் ஜெயந்தி” விழா கொண்டாடப்படுகிறது. தனது பக்தனான பிரகலாதனுக்காக, தூணிலிருந்து வெளிப்பட்டு இரணியனை சம்ஹாரம் செய்து அருள்புரிந்த நரசிம்ம மூர்த்தி பல்வேறு ஸ்தலங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவற்றுள் திருநெல்வேலி அருகில் உள்ள கீழப்பாவூர் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ள நரசிம்மர் திருக்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இங்கு கருவறையில் எழுந்தருளி காட்சி தரும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி பதினாறு கரங்களுடன், தனது மடியில் இரணியனை கிடத்தி சம்ஹாரம் செய்யும் திருக்கோலத்தில் அற்புதமாக காட்சியளிக்கிறார். இது போன்று பதினாறு கரங்களுடன் காட்சி தரும் நரசிம்ம மூர்த்தியை இந்தியாவில் மூன்று இடங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த கீழப்பாவூர் நரசிம்மர் திருக்கோவில் தவிர, கடலூர் அருகில் உள்ள சிங்கிரிகுடி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மற்ற இரண்டு நரசிம்மர் திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன.

இன்று நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு கீழப்பாவூரில் உள்ள நரசிம்ம மூர்த்திக்கு  சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். இவ்வருடம் கொரோனா நோய் பரவல் காரணமாக தற்போது திருக்கோவில்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் அனைவரும் நம் வீட்டில் இருந்தபடியே நரசிம்மரை வழிபட்டு அருள்பெறுவோமாக!

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் திருவிழாக்கால பீமன்.

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு வருடம்தோறும் நடைபெறும் ஆனிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.