Logo of Tirunelveli Today
English

Palayamkottai Sri Mannar Rajagopala Swamy Temple

The main deity of Palayamkottai Gopalan Temple with his consorts.

பாளையங்கோட்டை அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவில் (Palayamkottai Azhagiya Mannar Rajagopalaswamy Temple)

பாளையங்கோட்டை நகரின் மத்தியப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு கம்பீரமாக அமையப்பெற்றுள்ளது அழகியமன்னார் ஸ்ரீ இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இக்கோவிலை இப்பகுதி மக்கள் "கோபாலங்கோவில்" என்றே அழைக்கின்றனர்.

மூலவர் பெயர் (கீழ்தளத்தில்): வேதவல்லி, குமுதவல்லி உடனுறை வேதநாராயணர்.
மூலவர் பெயர் (மேல்தளத்தில்): ஸ்ரீ தேவி, பூ தேவி உடனுறை அழகியமன்னார்.
உற்சவர் பெயர்: இராஜகோபாலர்.
திருக்கோவில் விருட்சம்: செண்பக மரம்.
விமானம்: அஷ்டாங்க விமானம்.
தீர்த்தம்: வேத தீர்த்தக்கிணறு, தாமிரபரணி.

பாளையங்கோட்டை அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவில் (Palayamkottai Azhagiya Mannar Rajagopalaswamy Temple)

பாளையங்கோட்டை அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவில் 500-1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலைச் சுற்றிலும் பெரிய மதில் சுவர்களையும் மண வல்லப பாண்டியன் கட்டியதாக கருதப்படுகிறது. இந்ததிருத்தலத்தில் அமைந்துள்ள கோவிலானது தமிழ் கட்டிடக்கலை மற்றும் மதுரா கிருஷ்ணா கோயில் வடிவமைப்புகளின் கீழ் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. மிக அழகிய வடிவமைப்பு கொண்ட இந்த இடம் முன்பு திருமங்கை நகர் என்று அழைக்கப்பட்டது. அஷ்டாங்க விமானத்தின் (திரு கோஷ்டியூர்/உத்திர மேரூர்/கூடல் அழகர் போன்றது) கீழே இரண்டு அடுக்கு அமைப்புடன் கூடிய இந்த ஆலயம் 'துவி ஸ்தலம்' என்று அழைக்கப்படுகிறது.

வேதவள்ளி மற்றும் குமுதவல்லி தாயார் ஆகியோரின் கைகள் ஒரு கையால், வேத நாராயணன் பக்தர்களை தன்னிடம் வருமாறு அழைப்பது போலவும், மறுபுறம் பிரார்த்தனை செய்ய வருபவர்களை ஆசிர்வதிப்பது போலவும் தெரிகிறது. அவர் மற்ற இரண்டு கைகளிலும் சங்கு மற்றும் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். இந்த வர்ண கால மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. கோபுரத்தின் மீது அன்னை ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமியாக அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமியின் திருத்தலத்தில் வேத நாராயணனை தரிசனம் செய்த பிருகு மற்றும் மார்க்கண்டேய ரிஷிகளை தரிசிக்க வேண்டும். சந்நிதியில் வேத நாராயணனுடன் ஊர்வசி மற்றும் திலோத்தமா சிலைகளும் காணப்படுகின்றன. இக்கோயிலில் செண்பக விநாயகர், ஸ்ரீ விஷ்ணுவின் தசாவதாரம், 12 ஆழ்வார்கள், பரமபதநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. சுவரில் உள்ள மகா மண்டபத்தின் உள்ளே, ராமாயணக் கதையை வரைந்த அழகிய மூலிகை ஓவியங்களைக் காணலாம். இந்த மண்டபத்தின் உள்ளே, பெரும்பாலான தூண்களில் மீன் வடிவ சிற்பங்களைக் காணலாம், இது பாண்டியர் ஆட்சியின்போது கோயில் கட்டப்பட்டதற்கான மற்றொரு அறிகுறியாகும்.

மன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் வரலாறு:(Mannar Rajagopalaswami Temple History)

The scenic view of Gopal Swamy Temple Palayamkottai.

Image Credit : blogspot.com

முற்காலத்தில் சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். அதன்பொருட்டு தேவேந்திரனிடம் அனுமதி வேண்டினான். அதற்கு இந்திரன், அர்ஜுனா நீ தாராளமாக இந்திரலோகத்துக்கு வரலாம். அதற்கு முன்பு நீ செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. கடலுக்கு நடுவில் உள்ள தோயமாபுரத்தில் வாழும் அரக்கர் கூட்டத்தை நீ அழித்து, தர்மத்தை நிலைநாட்டிட வேண்டும் என்று கூறினார்.

அர்ஜுனனும் இந்திரன் கூறியபடியே தோயமாபுரத்துக்குச் சென்று அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டான். ஆனால் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அரக்கர்களை அழித்தாலும், அவர்கள் மீண்டும் எழுந்து வந்து போரிட்டனர். அர்ஜுனன் செய்வது அறியாமல் திகைத்து நின்றான். அப்போது வானில் இருந்து, அர்ஜுனா, அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ வெல்ல முடியும். இதுதான் அவர்கள் பெற்றிருக்கும் வரம்' என்று ஓர் அசரீரி ஒலித்தது.

உடனே அர்ஜுனனின் மனதில் சட்டென்று ஒரு திட்டம் உதித்தது. போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடுவதுபோல அர்ஜீனன் ஓடினான். அதைக் கண்ட அசுரர்கள் அர்ஜீனனை பார்த்து கேலிசெய்து கைதட்டிச் சிரித்தார்கள். அர்ஜுனனும் இதைத்தானே எதிர்பார்த்தான். உடனடியாக, தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை ஏவி ஒட்டுமொத்தமாக அரக்கர் கூட்டத்தை கொன்று குவித்தான்.

அர்ஜுனனின் இந்த வீரதீரச் செயலை மனதாரப் பாராட்டியதோடு, அதுவரை தான் வணங்கி வழிபட்டு வந்த ராஜகோபாலர் விக்கிரகத்தையும் அவனுக்கு பரிசாக கொடுத்து சிறப்பித்தான் தேவர்களின் தலைவன் இந்திரன். அந்த ராஜகோபாலரை அனுதினமும் பயபக்தியோடு வணங்கி வழிபட்டு வந்தான் இந்திரன். பிற்காலத்தில் அந்த விக்ரகம் இந்திரனால் பெருமாள் திருவுளப்படி கங்கையில் சேர்பிக்கப்பட்டது. பின் ஒரு நாள் தென்னகத்திலிருந்து புனித நீராட வந்த பல்கி என்னும் பாண்டிய மன்னனன் கங்கையில் நீராடிய பொழுது இவ்விக்ரகம் அவரது கைகளில் கிடைக்கப்பெறுகிறது.

பாண்டிய மன்னன் அந்த விக்ரகத்தின் எழிற்கோலத்தைக் கண்டு பேரானந்தம் அடைகின்றான். அதனை தன் ஆட்சிக்குட்பட்ட தென்தமிழகத்துக்குக் கொண்டு வந்து, தாமிரபரணிக் கரையில் எழுந்தருளச்செய்தான். சுவாமிக்கு கருவறையுடன் கூடிய அழகிய திருக்கோவிலை நிர்மாணித்து, ராஜகோபாலர் என்ற திருப்பெயர் சூட்டி வழிபட்டு வந்தான். அந்தக் கோவிலில் தற்போது உயர்ந்த புகழ்பெற்ற திருக்கோவிலாக விளங்குகிறது.( top Temples in Palayamkottai, Tirunelveli.)

இந்திரலோகத்து கோபாலனே இங்கு எழுந்தருளி நமக்கு காட்சியளித்துக்கொண்டிருக்கிறார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் இங்குள்ள ராஜகோபாலர் திருமேனி மிகவும் பழமை வாய்ந்ததாக காட்சியளிக்கிறது. முகத்தில் திருநாமம் சாத்தப்பட்ட வடுவே பெரிதாக தெரியும். இருந்தும் இவர் இடைநெளித்து நிற்கும் கோலத்தை காண கண்கள் கோடி வேண்டும்.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
(Nearby Tourist Places) by Car

பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றிய திருவிளையாடல்:

முற்காலத்தில் இக்கோயிலில் விஷ்ணுப்ரியன் என்னும் அர்ச்சகர், பெருமாளுக்கு தினமும் பூஜை செய்யும் கைங்கரியத்தை செய்து வந்தார். திருமணமாகிவிட்ட விஷ்ணுப்ரியனுக்கு தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகளாகபவே பிறந்தன. இதனால் தனக்குப் பின்னர் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்ய ஓர் ஆண் குழந்தை இல்லையே என விஷ்ணுப்ரியன் வருத்தப்பட்டு கொண்டே இருந்தார். தனக்கு எப்படியாவது ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோபாலசுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தார் அவ்வர்ச்சகர். இந்நிலையில் அவரது மனைவி கலாவதி மீண்டும் கர்ப்பம்தரித்தாள். இந்தமுறை எப்படியும் பெருமாள் அருளால் நிச்சயம் தனக்கு ஓர் ஆண் குழந்தை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் விஷ்ணுப்பிரியன்.

இறுதியாக இம்முறையும் கலாவதி பெண் குழந்தையே பெற்றெடுத்தாள். இதனால் கோபம் கொண்ட விஷ்ணுப்ரியன், பெருமாள் மீது கையிலிருந்த ஆரத்தித் தட்டை வீசியெறிந்தார். அத்தட்டு பெருமாளின் மூக்கின் மீது பட்டதால் பெரிய தழும்பு ஏற்பட்டது. அதே கோபத்துடன் விஷ்ணுப்ரியன் வீட்டுக்கு சென்றுவிட, அங்கோ பிறந்த பெண் குழந்தை, ஆண் குழந்தையாக மாறியிருந்தது. அதைப் பார்த்து பதறிப்போன விஷ்ணுப்ரியன், கோயிலுக்கு சென்று, தனது செயலை எண்ணி வருந்தி பெருமாளின் கால்களில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டார் . இதன் காரணமாகத்தான் இந்த சுவாமிக்கு "பெண்ணை ஆணாக்கிய இராஜகோபாலன்" என்ற பெயர் வந்ததாக கூறுகிறார்கள். இன்றும் ராஜகோபாலர் திருமேனியில் மூக்கில் காயம்பட்ட பெரிய தழும்பை நாம் காணலாம். எனவே இங்கு புத்திரபாக்கியம் வேண்டி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது.

மூலவர் வேதநாராயணர் மற்றும் அழகியமன்னார்:

அஷ்டாங்க விமானத்தில் உள்ள இரண்டு தளங்களில், கீழ் தளத்தில் மூலவராக வேதநாராயணர் அமர்ந்த கோலத்தில் பெருந்திருமேனியராக வேதவல்லி, குமுதவல்லி தேவியர்களுடன் காட்சித்தருகிறார். நான்கு வேதங்களைக் காத்து மகரிஷிகளுக்கு அருளிய பகவான், என்பதால் இவருக்கு "வேதநாராயணர்" எனப்பெயர். கருவறையில் பெருமாள் மற்றும் தாயார்களோடு சாமரம் வீசும் இரண்டு கன்னியர் மற்றும் இரண்டு ரிஷிகளும் உள்ளனர்.

அஷ்டாங்க விமானத்தில் உள்ள மேல் தளத்தில் அழகியமன்னார் நின்றகோலத்தில், ஸ்ரீ தேவி, பூ தேவி தேவியர்கள் மற்றும் இரண்டு ரிஷிகளுடன் வர்ணகலாபத்திருமேனியராக (சுதை வடிவம்) காட்சித்தருகிறார்.

உற்சவராக காட்சி தரும் ராஜகோபாலர்:

The adorned deity Urchavar Rajagopalaswamy of Gopal Swamy Temple Palayamkottai.
இக்கோவிலில் உற்சவர் ராஜகோபாலர் தன் இரு தேவியர்களோடு அழகாக காட்சித்தருகிறார். இவருடைய திருமுகத்தை நாம் உற்று நோக்கும் போது இவரின் பழமையையும் பெருமையையும் நாம் உணரலாம்.

ராஜகோபாலசுவாமி கோவில் அமைப்பு:(Rajagopalaswamy Temple Architecture)

பாளையங்கோட்டை மாநகரின் மத்தியில் ஐந்து நிலைகள் கொண்ட அழகிய ராஜகோபுரத்தோடு கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது இத்திருக்கோவில்.

ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம் மற்றும் கருடாழ்வார் சன்னதி கருவறைக்கு எதிராக அமையப்பெற்றுள்ளது.

கருடாழ்வார் சன்னதி வலப்புறம் தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் சன்னதி இருக்கிறது. உள்ளே படியேறிச்சென்றால் உற்சவர் மண்டபத்தில் சத்யபாமா, ருக்மணி சமேதராக இந்திரலோகத்து ராஜகோபாலன் அழகு தரிசனம் காட்டுகிறார். அவரைத்தாண்டி உள்ளே சென்றால் கருவறையில் வேதவல்லி, குமுதவல்லி சமேத வேதநாராயணர் அருள்பாலிக்கிறார்.

The grand gopuram of the Rajagopalaswamy temple depicting many Gods, Goddesses, and stories of Vishnu and the Thirunamam.

Image Credit : trawell.in

இது தவிர கோவில் பிரகாரத்தில் செண்பக விநாயகர், ஸ்ரீ தேவி, பரமபதநாதர், தசாவதார மூர்த்திகள், பூ தேவி, பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோர் தனிச்சன்னதிகளில் காட்சிதருகிறார்கள்.

கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள படிகள் வழியே மேலை ஏறிச்சென்றால் திருக்கோவில் மேல்பகுதியில் கருவறை விமானத்திற்குள் அமையப்பெற்றுள்ள அழகிய சன்னதியில் அழகியமன்னார் காட்சித்தருகிறார்.

திருக்கோவில் வெளிப்பிரகாரத்தில் நந்தவனம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பிரகாரத்தின் வடக்கு பகுதியில் பரமபத வாசலும், அதற்கு வெளியே தனி மண்டபமும் அமையப்பெற்றுள்ளது. முன்புறம் தெற்கு நோக்கிய அழகிய திருவிழா மண்டபமும், அதற்குள் பெருமாளுக்குரிய வாகனங்களும் காட்சித்தருகின்றன.

அருகிலுள்ள உணவகங்கள்
(Nearby Restaurants) by Car

அருகிலுள்ள ஹோட்டல்கள்
(Nearby Hotels) by Car

திருக்கோவில் சிறப்புக்கள்:(Mannar Rajagopalaswamy Temple Specialities)

முற்காலத்தில் பாளையக்காரர்கள் தாங்கள் தங்குவதற்கு உரிய இடமாக இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்ததால், பாளையங்கோட்டை என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். அதற்கேற்ப கோட்டை கொத்தளங்கள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றைக்கும் இந்தப் பகுதியில் காணமுடிகிறது.

ஒரு காலத்தில் இங்கே செண்பக மரங்கள் அதிகம் சூழ்ந்திருந்த காரணத்தினால் இத்தலத்துக்கு ‘செண்பகாரண்ய க்ஷேத்திரம் (’Shenbagaranya Kshetram in Palayamkottai) என்ற பெயரும் உண்டு. அதேபோல், இங்கே அமைந்திருக்கும் திருக்கோயிலுக்கு ‘வல்லப விண்ணகர்’ என்று திருப்பெயர். கி.பி.11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலுக்கு முதலாம் ராஜராஜன் பல திருப்பணிகளைச் செய்துள்ளார்.

இத்திருக்கோவிலின் விமானம் அஷ்டாங்க விமானம் என்று சிறப்பிக்கப்படுகிறது. ஒரே கோவிலுக்குள் இரண்டு அடுக்குகளில் பெருமாள் காட்சியளிப்பதும் சிறப்பம்சம் ஆகும்.

The deity Urchavar Rajagopalaswamy of Gopal Swamy Temple Palayamkottai is seen with his consorts during abhishekam.

வேதங்களை காத்து ரிஷிகளுக்கு ஞானத்தை அருளிய பெருமாள் என்பதால் இவர் அருளும், இவ்வூரிலும் கற்றறிந்த சான்றோர் பலர் நிறைந்து கல்வித்துறையில் சிறப்புப்பெற்று வருகிறது. (பாளையங்கோட்டைக்கு தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற சிறப்பு அந்தஸ்து உள்ளது குறிப்பிடத்தக்கது)

மன்னார் ராஜகோபாலசுவாமி கோவிலின் முக்கிய திருவிழாக்கள்:(Mannar Rajagopalaswamy Temple Festivals)

ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி மாதத்தில் பதினோறு நாட்கள் பிரம்மோற்சவமும், பங்குனி உத்திரம் அன்று தேரோட்டமும் மிகப் பெரிய விழாவாக விமரிசையாக நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் பத்தாம் நாள் தேரோட்டம் முடிந்து அன்று இரவு பெருமாள் தவழும் கண்ணனாக பல்லக்கில் எழுந்தருளுவார். பதினொராம் திருநாளன்று தாமிரபரணியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

The urchavar Rajagopalar, the deity of Gopal Swamy Temple Palayamkottai, is taken out on a grand procession. He is placed under a grand umbrella adorned with garlands and gold jewellery.

ஆவணி மாதத்தில் வருகின்ற கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை மற்றும் விஜயதசமி பரிவேட்டை, கார்த்திகை தீபம், மார்கழி திருப்பாவை வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, தை மாத ரதசப்தமி ஆகியவையும் சிறப்பான விழாக்களாக நடைபெறுகின்றது.

ஸ்ரீமன்னார் ராஜகோபாலசுவாமி கோவில் சிறப்பு விரதங்கள் மற்றும் பிரார்த்தனைகள்(Sri Mannar Rajagopala Swamy Temple Prayers)

திருமணப் பேச்சுக்களில் இருந்த தடைகள் நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும், கல்வியில் முன்னேற்றம் ஏற்படவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டு நிறைவேறியதும் பெருமாளுக்கு மக்கள் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்துகிறார்கள்.

பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோவில் நேரம் ( Palayamkottai Gopalaswamy Temple Timings)

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

வேதநாராயண பெருமாள் கோவில் அமைவிடம் (Vedhanarayana Perumal Temple Location):

A view of the stone mandapams leading to the Palayamkottai Gopalan temple's main entrance with the magnificent gopuram in the background.

Image Credit : blogspot.com

திருநெல்வேலி மாநகரில் இருந்து பாளையங்கோட்டை மத்திய பகுதி மத்திய பகுதியில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது இந்த கோவிலுக்கு செல்வதற்கு திருநெல்வேலி சந்திப்பிலிருந்து நகரப்பேருந்துகள் அதிகளவில் உள்ளன.

முகவரி: ஸ்ரீ மன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோயில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், 627002.

அருகிலுள்ள நகரங்கள்
(Nearby Cities) by Car
  • Thoothukudi - 54.1 km (1hr 6 min)
  • Tirunelveli - 2.1 km (6mins)
  • Thiruchendur - 60.4 km (1hr 52mins)
அருகிலுள்ள ரயில் நிலையம்
(Nearby Railway Stations) by Car
அருகிலுள்ள பேருந்து நிலையம்
(Nearby Bus Stops) by Car
அருகில் உள்ள விமான நிலையம்
(Nearby Airports) by Car
Written by ரேவதி சரவணகுமார்
பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவரா நீங்கள்?
அப்படியெனில் இந்த இடத்தை பற்றிய உங்களுது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுடைய கருத்துக்கள் மற்றும் நீங்கள் அங்கு எடுத்த புகைப்படங்களை கீழே உள்ள கமெண்ட் பிரிவில் பதிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The maximum upload file size: 1 MB. You can upload: image, video. Drop files here

இதையும் பார்க்கலாமே...

Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagclockmagnifiercrosstext-align-justify linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram