ஆப்பம் என்பது அரிசி மாவில் தயாரிக்கப்படும் கிண்ண வடிவிலான ஒரு வகை உணவு பதார்த்தம் ஆகும். இந்த ஆப்பத்தை தயார் செய்ய பிரத்யேக ஆப்பச்சட்டி பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் மிகவும் பிரபலமான இந்த ஆப்பம் தென் தமிழகத்திலும் பரவலாக விரும்பி உண்ணப்படுகிறது. கேரளாவில் ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள கடலை கறி, குருமா பிரபலம் என்றால் தமிழகத்தில் ஆப்பத்திற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் பால் - சீனி மற்றும் சாம்பார் - சட்னி பிரபலம் ஆகும். பொதுவாக காலை நேர உணவிற்கு ஆப்பம் ஏற்றதாக இருக்கும். இப்போது நாம் வீட்டில் எளிதாக கருப்பட்டி கலந்து இனிப்பான முறையில் ஆப்பம் தயார் செய்யும் முறை பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உருட்டு பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து, அதனுடன் வெந்தயம் சேர்த்து தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டி மாவாக அரைத்து வழித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த மாவை குறைந்தது ஒரு ஆறு மணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ளவும். காலை ஆப்பம் செய்வதற்கு முதல் நாள் இரவே மாவை அரைத்து புளிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் கருப்பட்டியை தட்டி போட்டு நன்றாக கரைய விட்டு பாகு காய்ச்சவும். இந்த கருப்பட்டி பாகு தண்ணீரை நாம் கெட்டியாக அரைத்து புளிக்க வைத்துள்ள மாவில் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். இப்போது ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் மாவை இரண்டு கரண்டி ஊற்றி, நன்றாக சுத்தி விட்டு மூடி போட்டு வேக விடவும். இப்போது சூடான கருப்பட்டி ஆப்பம் தயார். இதில் தேங்காய் பூக்களை தூவி சாப்பிடுவதற்கு பரிமாறலாம்.
குறிப்பு:
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது, சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாக வரும்.