கருணைக்கிழங்கு உடலுக்கு தேவையான அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலில் ஒரு வகை பிரகாசத்தையும் தருகிறது. நம் உடம்பில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை குணப்படுத்த இது ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் பி 6 அதிகமாக உள்ளது, மேலும் வைட்டமின் சி மற்றும் ஏ, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த கருணைக்கிழங்கு மசியல் தயாரிக்க எளிதானது. இதில் புளி சாறு சேர்க்கப்படுவதால் நமைச்சல் நீங்கும். ஆரோக்கியமான மற்றும் குறைந்த கலோரி நிறைந்த இந்த மசியல் சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். இப்போது நாம் இங்கு எளிதான மற்றும் ஆரோக்கியமான கருணைக்கிழங்கு மசியல் செய்முறை பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் புளியை பத்து நிமிடங்கள் வெந்நீரில் ஊற போட்டு நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். மிளகாயை கீறி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொடி வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கருணை கிழங்கை தோல் உரித்து சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு குழைய வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கிழங்கை கைகளால் பிசைந்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு இருப்புச்சட்டியை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, குத்து பருப்பு போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள மிளகாய், பொடி வெங்காயம், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி மசித்து வைத்துள்ள கருணைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இந்த கலவை நன்றாக ஒன்று சேர்ந்து குழம்பு பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வைத்தால் கருணைக்கிழங்கு மசியல் தயார்.
குறிப்பு:
கருணைக் கிழங்கை நீண்ட நாட்கள் வைத்திருந்து சமைத்தால் தான் காரல் தன்மை இன்றி இருக்கும். தோலை சற்று கீறினால் சிகப்பாக இல்லாமல் இருக்கும் கிழங்கு தான் மசியலுக்கு ஏற்றதாக இருக்கும்.