கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடைய பெண்கள் விண்ணப்பம் செய்யலாம்!

Kalpana Chawla Viruthuதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஓவ்வொரு ஆண்டும்  வீர, தீரச்செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களை பாராட்டும் வகையில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி 2021ம் ஆண்டிற்கான வீர, தீரச் செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின்  புகைப்படம், அவர்கள் சம்மந்தப்பட்ட பத்திரிக்கைச் செய்தி, சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் செய்த வீர, தீர சாதனைகள் பற்றிய விவரங்கள்  ஆகியவற்றை 3 ஸ்பைரல் பைண்டிங் நகல்களாக தயார் செய்து, பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கம் திருநேல்வேலி என்ற முகவரிக்கு நேரில் சென்றோ, தபாலிலோ 24.06.2021 அன்று  மாலை 5.00 மணிக்கு முன்னதாக  விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ராஜேஷ் அவர்கள் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் இது பற்றிய தகவலை அறிந்து கொள்ள 0462-2572632 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Lakshmi Priyanka

Check Also

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.