இனிப்பு பிடி கொழுக்கட்டை என்பது அரிசியினால் செய்யப்படும் பாரம்பரிய இனிப்பு வகை ஆகும். இந்த கொழுக்கட்டை இனிப்பை விரும்பும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. எனவே இது ஒரு நல்ல மாலை சிற்றுண்டியாக விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. பொதுவாக இந்த இனிப்பு பிடி கொழுக்கட்டை கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி மற்றும் வரலக்ஷ்மி விரதம் ஆகிய விழாக்காலங்களில் வீடுகளில் பிரபலமாக தயார் செய்யப்படும். இங்கு நாம் இந்த இனிப்பு கொழுக்கட்டையை வீட்டில் எளிதாக தயாரிக்கும் செய்முறை பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து ஒரு வெள்ளை துணியில் பரத்தி காய வைத்துக் கொள்ளவும். பின்னர் காய்ந்த அரிசியை மிக்ஸியில் போட்டு திரித்து, அதனை சல்லடையில் அலசி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மாவை இருப்புச் சட்டியில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அதில் அச்சு வெல்லத்தை தட்டி போட்டு பாகு காய்ச்சவும். பாகு கொதித்து வரும் போது அதில் ஏலக்காய்களை நுணுக்கி போட்டு, பாகை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு இருப்புச்சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு பருப்பையும், தேங்காய் பற்களையும் போட்டு மணம் வரும் வரை வறுத்து கொள்ளவும். இப்போது வறுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டு அதில் நாம் தயாராக வைத்துள்ள வெல்ல பாகை ஊற்றி, வறுத்து வைத்துள்ள சிறுபருப்பு மற்றும் தேங்காய் பற்களை சேர்த்து நன்றாக கிளறி கட்டியாக பிசைந்து கொள்ளவும். இப்போது அந்த மாவை உருட்டி கைகளால் கொழுக்கட்டையாக பிடித்து இட்லி தட்டில் வைத்து நீராவியில் அவித்து எடுத்தால் இனிப்பு பிடி கொழுக்கட்டை தயார்.
குறிப்பு:
இனிப்பு பிடி கொழுக்கட்டைக்கு வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தால் கூடுதல் ருசியாக இருக்கும்.