இன்று வைகாசி விசாகம்! தாமிரபரணி தோன்றிய நாள்!

Tamirabarani Riverவைகாசி மாதம் விசாக நட்சத்திரம் அன்று தான் தாமிரபரணி நதி இந்த பூமியில் தோன்றியதாக புராணங்கள் கூறுகிறது. தென்றல் வந்துலவும் தென் பொதிகையில் தோன்றி, திருநெல்வேலி மாவட்டத்தை செழிப்பாக்கி, இறுதியாக கடலில் கலக்கின்ற புண்ணிய நதியான இந்த தாமிரபரணியின் தலைப்பகுதியில் சிவனும், நெற்றியில் விஷ்ணுவும், இதயப்பகுதியில் பிரம்மனும், கைகளில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளும், கண்களில் சூரிய, சந்திரர்களும், மூக்கில் உமாதேவியும், காதுகளில் அசுவினி தேவர்களும், கன்னங்களில் காவிரியும், கோதாவரியும், உந்திக் கமலத்தில் வாயுவும், நாக்கில் கலைவாணியும், மார்பில் லட்சுமியும், கால் மூட்டுகளில் ஆதிசேஷன் முதலான நாகங்களும் உறைவதாக ஐதீகம்.

உலகில் உள்ள மனிதர்கள் எல்லாம் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள கங்கை நதியில் நீராடுவார்கள். அந்த கங்கை நதியே தன்னில் குவிந்துள்ள பாவங்களை போக்க இந்த தாமிரபரணியில் வந்து நீராடுவதாக தாமிரபரணி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த தாமிரபரணி நதிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, திருநெல்வேலியில் உள்ள சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் – ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோவிலில் முழு உருவ திருமேனி விக்கிரகம் அமையப்பெற்றுள்ளது. வைகாசி விசாகம் அன்று இங்குள்ள தாமிரபரணி அம்மைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறும். மேலும் இங்குள்ள தாமிரபரணி அம்மை, தைப்பூசம் அன்று சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் – ஸ்ரீ காந்திமதி அம்மையுடன், சிந்துபூந்துறை தீர்த்தக் கட்டத்திற்கு எழுந்தருளி தாமிரபரணியில் தீர்த்தவாரி காண்பது சிறப்பம்சம் ஆகும். தனது நீரிலேயே நீராடும் பெருமை கொண்ட தாமிரபரணி அம்மையை நாம் இன்று வீட்டில் இருந்தபடியே வணங்கி போற்றி மகிழ்வோமாக.!

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் கார்த்திகை மாத விசேஷங்கள்

திருநெல்வேலி சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில் கார்த்திகை மாத விசேஷ வழிபாடுகள்…! கார்த்திகை திருவனந்தல் வழிபாடு (Tirunelveli Nellaiappar temple …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.