இன்று சோமவார பிரதோஷம்!

Somawaara Pradhosamதிங்களை தனது தலை மேல் அணிந்த பரமேஸ்வரனுக்கு, திங்கள்கிழமையில் வரும் பிரதோஷ தினம் மிகவும் உகந்ததாகும். திங்கள்கிழமை வரும் பிரதோஷ தினமே சோமவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சோம வார பிரதோஷம் அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், ஆயிரம் பிரதோஷ தினங்களில் பெருமானை வழிபட்ட பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.  இந்த நாளில் முழு உபவாசம் இருந்து, நெற்றியில் திருநீறு  அணிந்து, சிவபெருமானின் நாமத்தை உச்சரித்து விரதம் மேற்கொள்ள வேண்டும். பின்னர் மாலை பிரதோஷ காலத்தில், சிவன் கோவிலிற்கு சென்று நந்தியெம்பெருமானையும், சிவபெருமானையும் முறைப்படி வழிபட வேண்டும்.

பொதுவாக பிரதோஷம் அன்று அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கும், நந்தியெம்பெருமானுக்கும் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். விரதம் இருப்பவர்கள் கோவில்களில் நடைபெறும் இந்த அபிஷேகங்களை கண்டு தரிசித்து, தேவார, திருவாசக பாடல்களை பாடி சிவபெருமானை வழிபட வேண்டும். தற்போது ஊரடங்கு காரணமாக திருக்கோவில் தரிசனத்துக்கு தடை விதிக்க பட்டுள்ள நிலையில், நாம் நம் வீட்டில் இருந்தபடியே, மனத்தால் நினைத்து இன்றைய பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபடுவோமாக!

About Lakshmi Priyanka

Check Also

இன்று சங்கடகர சதுர்த்தி விரதம்!

நமது வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் என்பதால் இதற்கு “சங்கடகர சதுர்த்தி விரதம்” என்று பெயர். …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.