இன்று சங்கடகர சதுர்த்தி விரதம்!

நமது வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் என்பதால் இதற்கு “சங்கடகர சதுர்த்தி விரதம்” என்று பெயர். இந்த விரதம் முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை குறித்து ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கழிந்த தேய்பிறை சதுர்த்தி திதியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தினத்தன்று மாலையும், இரவும் சந்திக்கும் வேளையில் கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதாக இந்த சதுர்த்தி விரதம் திகழ்கிறது. முதன்முதலில் இந்த சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகு தான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுவாக கூறப்படும் நியதி.

தன்னைப் பார்த்து ஏளனமாக சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்த விநாயகர், அவனுடைய கடும் தவத்துக்கு இறங்கி ஒரு சதுர்த்தி தினத்தில் தான், சந்திரனின் சாபத்தை நீக்கினார். எனவே சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் சந்திர பலம் கூடும் என்பது நம்பிக்கை. இத்தனை சிறப்புகள் மிக்க இந்த சங்கடகர சதுர்த்தி நாளில் நாமும் இன்று விநாயகப்பெருமானை வழிபட்டு பிறவி பெருங்கடல் நீந்தி கரை சேருவோமாக!

About Lakshmi Priyanka

Check Also

இன்று சோமவார பிரதோஷம்!

திங்களை தனது தலை மேல் அணிந்த பரமேஸ்வரனுக்கு, திங்கள்கிழமையில் வரும் பிரதோஷ தினம் மிகவும் உகந்ததாகும். திங்கள்கிழமை வரும் பிரதோஷ …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.