வைகுண்டத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளுக்குரிய திருத்தலங்கள் வைணவத் திருத்தலங்கள் என்று மக்களால் வணங்கக்கூடிய திருத்தலமாக போற்றப்படுகிறது. அந்த திருத்தலங்களில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்கள் ‘திவ்ய தேசங்கள்’ என்று அழைக்கப்படுகின்றது. பெருமாளுக்குரிய108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்18 திவ்ய தேசங்கள் பாண்டியநாட்டில் அமைந்துள்ளது. நவதிருப்பதிகள் என்று சொல்லக்கூடிய திவ்யதேசங்கள் பாண்டிய நாட்டு தேசத்தில் திருநெல்வேலியிலும் அமைந்திருக்கின்றது.
மதுரை , திருநெல்வேலி , தூத்துக்குடி ,புதுக்கோட்டை இராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளடக்கிய திவ்யதேசங்களாக பாண்டிய நாடுஅமைந்திருக்கிறது.
திருக்கோஷ்டியூர், திருமெய்யம் , திருக்கூடல், திருமாலிருஞ்சோலை , ஸ்ரீவில்லிபுத்தூர், திருமோகூர், திருக்குளந்தை, திருக்குறுங்குடி, அழகிய நம்பி, நாங்குநேரி வானமாமலை, திருத்தங்கல், திருப்புல்லாணி, வரகுணமங்கை, தொலைவில்லி மங்கலம், ஆழ்வார் திருநகரி, திருப்புளிங்குடி ஸ்ரீ வைகுண்டம், திருப்பேரை திருக்கோளூர், மலைமேல் நம்பி திருப்பாற்கடல் இவை அனைத்தும் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களாக புகழ் பெற்று விளங்குகின்றன.
பெருமாளுக்குரிய 108 திவ்யதேச கோவில்களில் திருநெல்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 12 திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. இதில் நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படும் திவ்ய தேசங்கள் திருநெல்வேலியில் அமைந்து இருக்கின்றது. கன்னியாகுமரிக்கு அருகில் இரண்டு திவ்ய தேசங்கள், நாகப்பட்டினத்தில் ஒரு திவ்ய தேசம் மற்றும் கேரளாவில் மார்த்தாண்டம் திவ்யதேசம் ஆக மொத்தம் 12 திவ்யதேசங்கள் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற திருத்தலங்களாக விளங்குகிறது.
1. திருக்குறுங்குடி - ஸ்ரீ நின்ற நம்பி பெருமாள் கோயில் (திருநெல்வேலி) - 82nd Divya Desam
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ நின்ற நம்பி பெருமாள் கோவில்.இந்த திருத்தலம் வாமன ஷேத்திரம் என்றும் தட்சிண பத்ரி என்றும் அழைக்கப்படுகிறது.
2. நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயில் (திருநெல்வேலி) - 81st Divya Desam
நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயில். ஸ்ரீ தோத்தாத்திரிநாதப் பெருமாள் கோயில் எனும் சிறப்புப் பெயர் கொண்டு புகழ் பெற்று விளங்குகிறது. இந்த திருத்தலம் தோத்தாத்ரி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
3. ஆழ்வார் திருநகரி - ஸ்ரீ ஆதிநாத சுவாமி கோயில் (தூத்துக்குடி) - 80th Divya Desam
ஆழ்வார்திருநகரி பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருநகரியில் அமைந்துள்ளது .இங்கு கருவறையில் நின்று அருள் பாவிக்கும் பெருமாளின் பாதங்கள் பூமிக்குள் புதைந்து இருப்பதாக கூறப்படுகிறது . இங்கு கருவறைக்கு எதிரே உள்ள கருடன் மற்ற கோவில்களைப் போல கரம் கூப்பிய நிலையில் இல்லாமல் சங்கு சக்கரம் ஏந்தி அபய - வரதம் காட்டியும் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது சிறப்பாகும்.
4. திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோயில் (தூத்துக்குடி) - 79th Divya Desam
ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோயில் நவ திருப்பதியின் எட்டாவது கோவிலாகும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருத்தலமாக விளங்குகிறது. இங்கு பெருமாள் குபேரனுக்கு படியளந்த மரக்காலை தன் தலைக்கு கீழ் வைத்தபடி சயனித்திருக்கிறார்.
5. திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங்குழைகாதர் பெருமாள் கோயில் (தூத்துக்குடி) - 78th Divya Desam
ஸ்ரீ மகர நெடுங்குழைகாதர் பெருமாள் கோயில். இந்த கோவில் வியாழன் கிரகத்திற்குரிய குரு ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு கருவறையில் அமர்ந்திருக்கும் பெருமாளின் காதுகளில் உள்ள மகர குண்டலங்கள் பிரசித்தி பெற்றதாகும். மீன் வடிவம் உடைய குண்டலங்களுடன்தான் பெருமாள் சேவை சாதிப்பார்.
6.திருவைகுண்டம் - ஸ்ரீ வைகுண்டநாதப் பெருமாள் கோயில் (தூத்துக்குடி) - 73rd Divya Desam
ஸ்ரீ வைகுண்டநாதப் பெருமாள் கோவிலில் . கள்ளபிரான் மற்றும் பால் பாண்டியன் என்ற பெயர்களால் அழைக்கப்படும் மூலவராக பெருமாள் கிழக்கு நோக்கி பார்த்தபடி காட்சியளிக்கிறார். மேலும் நவக்கிரக சந்நிதி இருக்கும் வைணவ திருத்தலமாக இந்த கோவில் அமைந்திருக்கிறது. இங்கு சித்திரை மாதம் ஆறாம் நாளிலும் ஐப்பசி மாதம் ஆறாம் நாளிலும் கருவறையிலுள்ள வைகுண்டநாதர் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பம்சமாகும்.
7. திருக்குளந்தை - ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் பெருங்குளம் (தூத்துக்குடி) - 76th Divya Desam
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஸ்ரீ மாயகூத்தர் பெருமாள் என்ற பெயர் கொண்ட திருத்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது . நவதிருப்பதிகளில் இந்த கோவில் சனி பகவானுக்குரிய ஸ்தலமாகும்.
8. திருவரகுணமங்கை ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் கோயில் (தூத்துக்குடி) - 74th Divya Desam
திருவரகுணமங்கை ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் கோயில் திருச்செந்தூர்-திருநெல்வேலி வழித்தடத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில்அமைந்துள்ளது. ஸ்ரீ விஜயாசனம் என்றால் சத்திய வெற்றியின் மேல் வீற்றிருக்கும் பெருமான் என்பது பொருளாகும். இந்தத் தலத்தில்தான் பிரமனின் ஆணவத்தை அடக்க உரோமச முனிவருக்கு அதிக ஆயுளை பெருமாள் அருளியதாக புராணம் கூறுகின்றது.
9. திருப்புளியங்குடி - ஸ்ரீ கைச்சின வேந்தப் பெருமாள் கோயில் (தூத்துக்குடி) - 75th Divya Desam
பூமிபாலகர் பெருமாள் கோயில் என்று சிறப்பு பெற்று விளங்குகின்ற திருத்தலம் ஆகும். இந்த ஸ்ரீ கைச்சின வேந்தப் பெருமாள் கோயில் திருச்செந்தூர்-திருநெல்வேலி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள் சுமார் 12 அடி நீளத்தில் சயனக்கோலம் சாதித்தருள்வதால், இவருடைய திருமுகம் முதல் மூட்டு வரை உள்ள பகுதியை மட்டுமே நாம் கருவறையில் தரிசிக்க முடியும் . பிரகாரத்தில் உள்ள சாளரத்தின் வழியாகத்தான் இவருடைய பாதங்களை நன்றாக தரிசிக்க முடியும்.
10. திருத்தொலைவில்லி மங்கலம் - இரட்டை திருப்பதி கோயில்கள் (தூத்துக்குடி) - 77th Divya Desam
திருச்செந்தூர் - திருநெல்வேலி வழியே உள்ள ‘தொலைவில்லிமங்கலம்’, ஸ்ரீ தேவபிரான் கோயில் மற்றும் ஸ்ரீ அரவிந்தலோச்சனார் கோயில் ஆகியவை ‘இரட்டை திருப்பதி கோயில்கள்’ என்று போற்றப்படுகின்றது. இங்குள்ள அரவிந்த லோசன பெருமாளை ஆயிரத்தெட்டு செந்தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து நீராஞ்சனம் சமர்ப்பித்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாகும்.
11- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் (விருதுநகர்) - 72nd Divya Desam
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், ஸ்ரீ, லட்சுமி தேவியின் அவதாரமாகிய 'ஆண்டாள்' பிறந்த இடம் என்ற புகழோடு விளங்குகிறது. 108 திவ்ய தேசத்தின் அதிபதியான விஷ்ணுவுக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 அடுக்கு கோபுர அமைப்பு அமைந்திருப்பது மிக முக்கியமான சிறப்புக்குரியதாகும். 192 அடி உயரத்தில் கோவிலின் கோபுரம் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பிறந்தார். இந்த திருக்கோவில் கிபி 788 இல் பெரியாழ்வாரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது,
12- திருமெய்யம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் (புதுக்கோட்டை) - 69th Divya Desam
தமிழ்நாட்டின் புதுக்கோட்டைமாவட்டத்தில் திருமெய்யம் அமைந்துள்ளது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 106 ஆவது திருப்பதியாக திருமெய்யம் விளங்குகிறது சத்யகிரீஸ்வரர் சிவன் கோவில் மற்றும் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் இரண்டும் சைவ வைணவ ஒற்றுமைக்கு பெயர் கொண்ட கோவிலாக திகழ்கிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலை விட பிரம்மாண்டமான , மிகவும் பழமைவாய்ந்த திருத்தலம் என்ற பெருமைக்குரிய திருத்தலமாக ஆதி ரங்கம் விளங்குகின்றது.
13- திருக்கோட்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் (சிவகங்கை ) - 68th Divya Desam
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டத்தில் திருக்கோட்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது .இந்தத் திருத்தலத்தில் சௌமிய நாராயணர் புஜங்க சயனத்தில் “உரகமெல்லநாயன்” என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மிகவும் புகழ் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ( 108 Divya Desam) ஒன்றான இந்தத் திருத்தலத்தில் ராமானுஜாச்சாரியார் "ஓம் நமோ நாராயணா" என்ற புனித அஷ்டாக்ஷர மந்திரத்தை மக்களுக்கு வழங்கினார்.
14- திருக்கூடல் கூடலழகர் பெருமாள் கோவில் (மதுரை) - 65th Divya Desam
மதுரையில் கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் புகழ்பெற்ற திருக்கோவிலாக இந்த கோவில் அமைந்துள்ளது. திருக்கூடல் திவ்யதேசமானது “கள்ளழகர் கோயில்”எனும் பெருமையோடு மூன்று நிலைகளைக் கொண்ட திருக்கோவிலாக மூன்று சயன நிலைகளிலும் இறைவன் அருள்பாலிக்கிறார். கோவிலின் கருவறையில் கூடலழகர் ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனும் பெயரோடு காட்சி தருகிறார். வைகை நதியில் இடைவிடாது பெய்த மழையால் மக்கள் ஒன்றாக இந்த இடத்தில் திரண்டதால் திருக்கூடல் என்று இந்தத் திருத்தலம் பெயர் பெற்றது
15 - திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் (மதுரை) - 67th Divya Desam
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள திருமாலிருஞ்சோலையில் அழகர் மலையில் அழகர் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் அழகர் கோவில் இந்தத் திருத்தலம் பாண்டிய நாட்டு திவ்ய தேசமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த திருத்தலத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பட்டது என்பது வரலாறு. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயில் - மூலவர் மற்றும் உற்சவர் இருவரும் பஞ்சாயுதத்துடன் கூடியகாட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
16 - திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் (மதுரை) - 66th Divya Desam
மதுரைக்கு வடக்கே ஒத்தக்கடை அருகே திருமோகூர் திருத்தலம் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் திருத்தலமும் ஒன்றாகும். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் திருப்பாற்கடல் பெருமாள் பிரார்த்தனா சயனத்தில் அருள்பாலிக்கிறார். இந்த திருத்தலத்தின் மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சி புரிந்த மருதுபாண்டியர் மருதுபாண்டியரால் கட்டப்பட்டது. இந்தத் திருத்தலத்தில் சிற்பங்கள் அனைத்தும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன என்பது இந்தத் திருக்கோவிலில் சிறப்புக்குரியதாகும்.
17 - திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் (விருதுநகர்) - 71st Divya Desam
விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் பழமையான திவ்ய தேசமாக விளங்குகிறது. மகாலட்சுமி தாயார் இந்த திருத்தலத்தில் தான் தவம் புரிந்தார். அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் என்ற பெயரிலும் இந்தக் கோவில் அழைக்கப்படுகின்றது. குன்றின் மேல் நின்ற கோலத்தில் நாராயணன் மற்றும் முருகப் பெருமான் இங்கு தங்கியிருப்பதால் திருத்தங்கல்என்றும் அழைக்கப்படுகிறது.
18- திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் திருக்கோவில் (ராமநாதபுரம்) - 70th Divya Desam
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி எனும் ஊரில் அமைந்துள்ள ஆதி ஜெகநாத பெருமாள் திருக்கோவில் 108 திவ்யதேசத்தில் (Divya Desam temples) மிக அழகிய திருத்தலமாகும்.கல்யாண ஜெகன்நாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார் ராமாயண வரலாறு இந்த திருத்தலத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. திருப்புல்லாணி திவ்யதேசத்தில் குடி கொண்டுள்ள ஆதி ஜகநாதப் பெருமாள் இந்த திருத்தலத்தில் பட்டாபிஷேக ராமர் மற்றும் தர்ப்ப சயன ராமராக அருள் பாலிக்கிறார்.
பாண்டிய நாட்டு வைணவ தலத்தில் நவதிருப்பதிகள் மற்றும் திவ்ய தேசங்கள் அனைத்தும் பெருமாளுக்குரிய புகழ் பெற்ற 108 திவ்ய தேசங்களில் போற்றக்கூடிய திருத்தலங்களாக விளங்குகின்றது.