சித்திர வடிவில் காட்சிதரும் சபாபதி.

Chithira Sabaiநடராஜ பெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையாக விளங்கும் ஸ்தலம் திருக்குற்றாலம். இந்த சித்திர சபை முழுவதும்  இயற்கை மூலிகைகளால் தீட்டப்பட்ட சித்திரங்களுடன் காணப்படுகின்றன. இந்த சபைக்குள் மூலவர் சபாபதியும் சித்திர வடிவில் தான் காட்சித் தருகிறார் என்பது சிறப்பம்சம் ஆகும். 

திருவாலங்காடு – ரத்னசபை, தில்லை(சிதம்பரம்) – கனகசபை, திருவாலவாய் – வெள்ளிசபை, திருநெல்வேலி – தாமிரசபை, திருக்குற்றாலம் – சித்திரசபை ஆகியவை பஞ்ச சபைகள் ஆகும். மற்ற 4 சபைகளில் நடராஜர் விக்கிரமாகக் காட்சியளிக்க, இங்கு மட்டும் சித்திர வடிவில் நடராஜர் காட்சியளிக்கிறார் என்பதும் திருக்குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோவிலின் துணைக்கோவிலாக விளங்கும் இந்த சித்திர சபையில் உள்ள மூலவருக்கே, மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை விழாவில் முதல் பூஜை மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெறும் என்பதும் இத்தலத்தின் சிறப்பம்சம் ஆகும்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!