தமிழக மக்களின் உணவுகளில் பாயாசம் மிகவும் முக்கிய இடத்தை பெறும். பாயாசம் இல்லாத கல்யாண விருந்தை நாம் காண முடியாது. தென் தமிழக பகுதிகளில் சேமியா பால் பாயாசம், பாசிப்பருப்பு-ஜவ்வரிசி பாயாசம் போன்றவை மிகவும் பிரசித்தம் என்றால் திருநெல்வேலி பகுதியில் கூடுதலாக அரைத்த அரிசி பாயாசமும் பிரசித்தம் ஆகும். பச்சரிசியுடன், தேங்காய் துருவல் கலந்து அரைத்து செய்யப்படும் இந்த பாயாசத்தின் செய்முறை பற்றி இங்கு நாம் காணலாம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
முதலில் பச்சை அரிசியை சுத்தம் செய்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பச்சை அரிசியுடன், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, அதில் அச்சு வெல்லத்தை தட்டி போட்டு கொதிக்க வைக்கவும். வெல்லம் நன்றாக கரைந்து கொதித்து வரும்போது, அதில் அரைத்த விழுதை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் இந்த கலவை நன்றாக வெந்தவுடன், ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட்டு இறக்கினால் பாயாசம் தயார்.
குறிப்பு:
பச்சரிசி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கும் போது சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் ருசியும் நன்றாக இருக்கும்.