ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வரும் வளர்பிறை திருதியை திதியில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் பற்றியும், பெருமைகள் பற்றியும் பவிஷ்யோத்ர புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
- இந்த தினத்தில் தான் மஹாவிஷ்ணுவின் பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.
- இந்த தினத்தில் தான் உணவுக்கு அதிபதியாக விளங்கும் அன்னபூரணி அவதரித்தாள்.
- இந்த தினத்தில் தான் படைக்கும் கடவுளான பிரம்மா இந்த உலகை படைத்தார்.
- இந்த தினத்தில் தான் ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடிட தங்க மழை பொழிந்தது.
- இந்த தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு பலன்களை தரும்.
- இந்த தினத்தில் மிருத சஞ்சீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் தாக்கம் குறையும்.
- இந்த தினத்தில் தானம் செய்வதால் நற்பலன்கள் கிட்டும்.
- இந்த தினத்தில் தான் சிவபெருமான் பிட்சாடனராக வந்து அன்னபூரணியிடம் யாசகம் பெற்றார்.
- இந்த தினத்தில் தான் குபேரன், மஹாலக்ஷ்மியை பூஜை செய்து நிதி கலசங்களை பெற்றான்.
- இந்த தினத்தில் தான் கங்கை நதி, பூமியில் தோன்றி பாய்ந்தோடியது.
இத்தனை சிறப்புகள் பெற்ற இந்த நாளில் நம் வீட்டில் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து, பிறருக்கு அன்னதானம் செய்த பின்னரே நாம் உணவு உண்ண வேண்டும். இதனால் நாம் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பல்லாண்டு வாழலாம் என்பது நம்பிக்கை.