ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் ஓசை கூட “ஓம்” என்று ஒலிக்கும் அதிசயம்!

Tiruchendur Templeஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடாக திகழும் கோவில் திருச்செந்தூர். கடற்கரையில் கம்பீரமாக அமையப்பெற்றுள்ள இந்த திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும். இந்த கோவிலில் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் ஓசை கூட “ஓம்” என்று ஒலிக்கும் அதிசயத்தை நாம் கேட்கலாம்!

ஆம்! இந்த கோவிலில் மூலவர் சன்னதிக்கு நேர் எதிரே, கிழக்கே செப்பு கொடிமரம் அருகே பிரகார சுவற்றில் ஒரு செவ்வக  வடிவ துவாரம் இருக்கும். இந்த துவாரத்தில் நாம் நம் காதுகளை வைத்து ஆழ்ந்து கவனித்தால் கடல் அலைகள் “ஓம்” என்று ஒலிப்பது போலவே கேட்கும் அதிசயத்தை நாம் உணர முடியும்! அடுத்த முறை திருச்செந்தூர் சென்றால்  கடல் அலையின் இந்த அதிசய ஒலியை நீங்களும் கேட்டு உணருங்கள்!

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.