அரசு அருங்காட்சியகம் சார்பில் காகித கலைப் பயிற்சி…!

Government Museumதிருநெல்வேலியில் உள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் காகித கலைப் பயிற்சி இன்று நடத்தப்படுகிறது. காகிதங்கள் மூலம் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட உருவங்களை உருவாக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக செலவிட இது போன்ற பயிற்சிகள் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். மேலும் ஜூம் செயலி மூலம் நடைபெற உள்ள இந்த பயிற்சியில் வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் பங்கு கொள்ளலாம். இன்று மாலை மணி அளவில் நடைபெற உள்ள இந்த காகித கலைப் பயிற்சியில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜூம் செயலி எண்: 8740995990, பாஸ்வேர்ட்: 333543, என்ற தளத்தில் இணையும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

About Lakshmi Priyanka

Check Also

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் தடுப்பூசி மையம் திறப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக இன்று முதல் கூடுதல் மையம் திறக்கப்படுகிறது. தினமும் தடுப்பூசி …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.