Monthly Archives: ஆகஸ்ட் 2021

வரலட்சுமி நோன்பு

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே பல்வேறு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்கள் களைகட்டத் துவங்கி விடும். ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு, ஆடி மாத செவ்வாய்க்கிழமை வழிபாடு, ஆடி முளைப்பாரி விழா, கோவில் கொடை விழா, ஆடி அமாவாசை என வரிசையாக விசேஷங்கள் வந்து கொண்டே இருக்கும். இவற்றுள் ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுவது வரலட்சுமி நோன்பு ஆகும். இந்த நோன்பை திருமணம் ஆகி சுமங்கலியாக வாழும் பெண்கள் தங்கள் …

Read More »

ஆடி அவ்வையார் நோன்பு:

தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆடி மாதம் அவ்வையார் நோன்பு கடைபிடிக்கும் வழக்கம் உண்டு. பொதுவாக இந்த அவ்வையார் நோன்பு பெண்களால் ஆடி மாதம், தை மாதம், மாசி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடைபிடிக்கப்படுவது வழக்கம். இதனை குறிக்கும் விதமாக “அசந்தால் ஆடி, தகுந்தது தை, மறந்தால் மாசி”ன்னு ஒரு சொலவடையே உண்டு. பெண்களால் கடைபிடிக்கப்படும் இந்த நோன்பில் ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி …

Read More »

திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஆடிப்பூரம் முளைக்கொட்டு திருவிழா:

“திங்கள்நாள் விழ மல்கு திருநெல்வேலி” என்று திருஞானசம்மந்தரால் சிறப்பித்து பாடப்பட்ட திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் வருடத்தின் பன்னிரண்டு மாதங்களும் பல திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றாலும், ஆடி மாதம் நடைபெறும் முளைக்கொட்டு திருவிழா மற்றும் ஐப்பசி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களும் காந்திமதி அம்மை சன்னதியில் கொடியேற்றமாகி விமரிசையாக நடைபெறும். பொதுவாக ஒரு பெண் தனக்கு திருமணம் ஆகிய பின்னர் தன் கணவர் வீட்டில் தான் வாழ …

Read More »

ஆடி இறுதி வழிபாடு:

தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் “ஆடி இறுதி வழிபாடு” மிகவும் பிரபலம் ஆகும். ஆடி மாதத்தின் இறுதி நாள் (அதாவது ஆவணி மாத பிறப்புக்கு முந்தைய தினம்) இந்த வழிபாடு மேற்கொள்ளப்படும் இது தென்புலத்தார் வழிபாடாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று அந்தந்த வீட்டின் மறைந்த முன்னோர்களுக்கும் & கன்னிக்கும் படையல் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கன்னி வழிபாடு: ஒரு பெண் இந்த உலகில் பிறந்து திருமணம் செய்து …

Read More »