Monthly Archives: ஜூலை 2021

ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா

திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முளைப்பாரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவுக்காக ஆடி மாதம் வரும் இரண்டாம் அல்லது மூன்றாம் செவ்வாய்க்கிழமை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு முளைப்பாரி விழா தொடங்கப்படும். விழாவின் தொடக்க நாளன்று கோவிலில் முளைப்பாரி போட போகும் பெண்கள், விரதம் இருந்து காப்புக்கட்டி கொள்வார்கள். துவக்க நாளன்று தண்ணீரில் ஊறவைத்த நவதானியங்களை மண் சட்டியில் தூய மண் …

Read More »

பொதுமக்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர்!

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் காணொளி மூலமாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பங்கு கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். இதில் மாநகராட்சியின் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இது போல பொதுமக்களுடன் காணொளி கலந்துரையாடல் நடைபெறும் …

Read More »

அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து! திருநெல்வேலி ஆட்சியர் எச்சரிக்கை!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள் அதிக விலைக்கு உரம் விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உரம் விற்பனை செய்யும் அனைத்து கடைகளிலும் விவசாயிகள் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைத்திருக்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக்கருவி மூலம் உரங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் …

Read More »

தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள்!

கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை (05/07/2021) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாநிலங்களுக்குள் நடைமுறையில் உள்ள ஈ-பாஸ், ஈ-பதிவு முறை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், பேக்கரி கடைகள் மாற்று தேநீர் கடைகளில் 50% சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்படுகிறது. மாநிலம் …

Read More »

திருநெல்வேலி அருகில் உள்ள தச வீரட்டான ஸ்தலங்கள்.

திருநெல்வேலி அருகிலுள்ள பத்து சிவாலயங்கள் “தச வீரட்டான ஸ்தலங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த பத்து சிவாலயங்களும் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்றுள்ளது சிறப்பம்சம் ஆகும். இந்த பத்து ஸ்தலங்களுள் ஒன்பது ஸ்தலங்கள் திருநெல்வேலி அருகிலும், பத்தாவது ஸ்தலமான திற்பரப்பு மகாதேவர் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகிலும் அமையப்பெற்றுள்ளது.  தச வீரட்டான ஸ்தலங்கள் எனப்படும் மேற்கு திசை நோக்கிய சிவாலயங்கள்: 1. பக்த ஸ்தலம்: சிவசைலம்  ஸ்ரீ சிவசைலப்பர் திருக்கோவில். 2. …

Read More »

திருநெல்வேலி அருகே உள்ள தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத ஸ்தலங்கள்!

பொதுவாக பஞ்ச பூத ஸ்தலங்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது சிதம்பரம், திருவானைக்காவல், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து ஸ்தலங்கள் ஆகும். இது போல தென்பாண்டி நாடு என்று சிறப்பிக்கப்படும் திருநெல்வேலி ஜில்லா பகுதியிலும் பஞ்ச பூத ஸ்தலங்கள் அமையப்பெற்றுள்ளன. தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத ஸ்தலங்கள்: 1. மண் ஸ்தலம்: சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மை உடனுறை ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி திருக்கோவில். 2. அக்னி ஸ்தலம்: …

Read More »

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவமனையில் நவீன ரத்த பரிசோதனை கருவி!

திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இங்கு சுமார் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன ரத்த பரிசோதனை கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன கருவியின் செயல்பாட்டை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் துவக்கி வைத்தார். பொதுவாக நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல கோளாறுகளை கண்டறிய ரத்த …

Read More »

திருநெல்வேலி வழியாக செல்லும் நாகர்கோவில் – சென்னை அந்தியோதயா ரயில் இன்று முதல் இயக்கம்!

பொதுமக்களின் பயன்பாட்டைக் கருதி சென்னை – தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை அந்தியோதயா ரயில் சேவை துவக்கப்பட்டது. மற்ற ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்ய வேண்டிய நிலையில், அந்தியோதயா ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் திருநெல்வேலி வரை இயக்கப்பட்ட அந்தியோதயா ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. பின்னர் கொரோனா நோய்த்தொற்று …

Read More »

திருநெல்வேலியில் டிரோன்களை பறக்க விட தடைவிதிக்கப்பட்டுள்ளது!

இந்திய எல்லைப்பகுதியான காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிரோன்கள் மூலமாக இந்திய விமானப்படை தளம் மற்றும் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனையடுத்து மத்திய அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டில் உள்ள  ராணுவ முகாம்கள், அணு உலைகள், ஆராய்ச்சி மையங்கள், ஆயுத தொழிற்ச்சாலைகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடைவிதித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியிலும் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் …

Read More »

திருநெல்வேலி அருகே உள்ள பஞ்ச குரோச ஸ்தலங்கள்!

திருநெல்வேலி அருகிலுள்ள ஐந்து சிவாலயங்கள் பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முற்காலத்தில் தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, சிவபெருமான் அம்பெய்தி உடைத்தார். அந்த அமுதம் பூலோகத்தில் பல்வேறு இடங்களில் சிதறி ஐந்து குரோசம் தூரம் வரையில் பரவி ஐந்து ஸ்தலங்களை உண்டாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும். ஆக ஐந்து குரோச தூரத்தில் அமையப்பெற்றுள்ள கோவில்கள் என்பதால் இந்த ஐந்து சிவாலயங்களும் “பஞ்ச …

Read More »

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர், பொது இடங்களில் தேவையில்லாமல் கூட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகளால் தொற்று குறைந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாநகரில் பொது மக்கள் சகஜமாக வெளியே உலாவ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணுசந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகர பகுதிகளில் பரவி வந்த கொரோனா பெருந்தொற்று மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது …

Read More »

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் ஆன்லைன் மூலம் கலைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் என்.பி.என்.கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  பல்வேறு கலைப் பயிற்சி வகுப்புகளை இலவசமாக இணையதளம் மூலம் நடத்தி வருகிறது. இந்த வாரம் வியாழக்கிழமையான இன்று 01/07/21, மாலை 3.00 மணிக்கு மணல், சிறிய கற்கள், சிறு குச்சிகள் கொண்டு அழகிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் …

Read More »