Monthly Archives: ஜூன் 2021

திருநெல்வேலி அருகே உள்ள பஞ்ச குரு ஸ்தலங்கள்!

திருநெல்வேலி அருகே உள்ள ஐந்து சிவாலயங்கள் பஞ்ச குரு ஸ்தலங்களாக போற்றப்படுகின்றன. இந்த ஐந்து திருக்கோவில்களில் காட்சிதரும் குருவாகிய ஸ்ரீ தட்சிணாமுர்த்தியை ஒரே நாளில் வழிபடுவது சிறப்பு பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது.  பஞ்ச குரு ஸ்தலங்கள்:  1. திருப்புடைமருதூர் – ஸ்ரீ கோமதி அம்மை உடனுறை ஸ்ரீ நாறும்பூநாத சுவாமி திருக்கோவில். 2. அத்தாளநல்லூர் – ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ மூன்றீஸ்வரமுடையார் திருக்கோவில். 3. தென்திருபுவனம் – …

Read More »

திருநெல்வேலி மாநகராட்சி சம்பந்தமான புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு!

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குப்பைகள் தேக்கம், பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், வடிகால் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவற்றில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை ஏற்கனவே நடைமுறையில் உள்ள 94899 30261 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் அவர், இந்த வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கப்படும் குறைகள் …

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க “வணக்கம் நெல்லை 24/7” வாட்ஸ்-அப் எண் அறிமுகம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள், நேற்று  “வணக்கம் நெல்லை” 97865 66111 என்ற புதிய வாட்ஸ்-அப் எண்ணை அறிமுகம் செய்து வைத்தார். பொது மக்கள் இந்த எண்ணில் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் புகார்களை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். இந்த வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கப்படும் குறைகள் மற்றும் …

Read More »

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் புதிய அணு உலைகள் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணு மின்நிலையத்தில் ஏற்கனவே 1, 2  இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக  3 மற்றும் 4 வது அணு உலையின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது மூன்றாம் கட்டமாக  சுமார் 49 ஆயிரத்து 621கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 5 மற்றும் 6 வது அணு உலைகள் அமைக்கும் பணி நேற்று காலை …

Read More »

சேரன்மகாதேவி மிளகு பிள்ளையார் சிறப்பு!

திருநெல்வேலி மாவட்டம்., சேரன்மகாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் திருக்கோவில். கன்னடியன் கால்வாயின் கரையில் அமையப்பெற்றுள்ள இந்த கோவிலில் உள்ள விநாயகரின் உடலில் மிளகை அரைத்து தேய்த்து, குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்து, அந்த புனித தண்ணீரை கால்வாய்க்குள் விழும்படி செய்தால், மழை பொழிந்து தண்ணீர் செழிக்கும் என்பது ஐதீகம். எனவே மழை பொய்த்து போகும் காலத்தில் இந்த விநாயகருக்கு மிளகு அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்யும் வழக்கம் இன்றும் நடைமுறையில் …

Read More »

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 5 மற்றும் 6 வது அணு உலைகள் அமைக்கும் பணி இன்று துவக்கம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் இந்திய – ரஷ்யா கூட்டு ஒப்பந்தத்துடன் 1000 மெகாவாட் உற்பத்தி திறனை கொண்ட 6 அணு உலைகளை அமைப்பது இந்திய அணு சக்தித்துறையின் திட்டம் ஆகும். இதில் முதல் கட்டமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. பின்னர்  இரண்டாம் கட்டமாக 3 மற்றும் 4 வது அணு உலைகள் கட்டும் பணியும் …

Read More »

திருநெல்வேலியில் புதிய காவல்துறை துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்!

திருநெல்வேலியில் புதிய காவல்துறை துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார்! திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளராக இருந்த திரு.ராஜராஜன் அவர்கள், தூத்துக்குடி காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு புதிய துணை ஆணையாளராக சென்னை தமிழக சிறப்பு காவலர் பயிற்சி பள்ளியின் படைத்தலைவராக பணியாற்றி வந்த திரு.சுரேஷ்குமார் அவர்கள் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து திரு.சுரேஷ்குமார் அவர்கள் …

Read More »

திருநெல்வேலியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உட்பட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரில் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.  நேற்று முதல் இந்த புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் …

Read More »

வசந்த உற்சவம் காண தனது பிறந்த ஊருக்கு எழுந்தருளும் பரமகல்யாணி அம்மை!

திருநெல்வேலி அருகே அமையப்பெற்றுள்ளது சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ சிவசைலநாதர் திருக்கோவில். கடனா நதிக்கரையில் மேற்குநோக்கி அமையப்பெற்றுள்ள இந்த சிவாலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் கருவறையில் காட்சிதரும் பரமகல்யாணி அம்மை திருமேனி, இந்த கோவில் அமையப்பெற்றுள்ள பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆம்பூர் என்னும் ஊரின் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது. எனவே ஆம்பூர் பரமகல்யாணி அம்மையின் பிறந்த …

Read More »

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது!

திருநெல்வேலியில் காவலர்களுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சி முகாம் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்ட காவலர்களுக்கு உடம்பிற்கு வலு சேர்க்கும் உளுந்தங்கஞ்சி வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாநகர துணை ஆணையாளர் ராஜராஜன், ஆயுதப்படை துணை ஆணையாளர் முத்தரசு மற்றும் காவலர்கள் …

Read More »

சிவகளையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் 40 முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளது!

திருநெல்வேலி அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளில் தமிழக தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. முதலாம் கட்டமாக நடைபெற்ற அகழாய்வில் பழங்கால பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், கிண்ணங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் என பலவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி முதல் …

Read More »

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் பேருந்து சேவைக்கு அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், தமிழக அரசு மாநிலத்தில் நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதற்காக நோய்த்தொற்று பரவலின்   அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் வகை 3-ல் வரும் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் …

Read More »
error: Content is protected !!