Monthly Archives: மே 2021

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 22

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-22ல்., 67. தீர்த்தச் சருக்கம். 68. நீலவண்ணன் அன்னதான மகிமை சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 67. தீர்த்தச் சருக்கம்: திருநெல்வேலியில் உள்ள தீர்த்தங்களில், கயிலையில் உள்ள தீர்த்தங்களும், காஞ்சியில் உள்ள தீர்த்தங்களும் மற்றத் தலங்களில் உள்ள அனைத்துத் தீர்த்தங்களும் உறைவதால், திருநெல்வேலிக்குச் “சர்வதீர்த்தபுரம்” என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் முப்பத்தியிரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் தத்துவமையமானதாகும். ஒவ்வொன்றிலும் அத்தனை தீர்த்தங்களும் உறைகின்றன. இவற்றில் …

Read More »

பிள்ளைகளை காக்கும் பிட்டாபுரத்தி அம்மன்!

திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீ பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இந்த கோவிலில் உள்ள அம்மன் பிள்ளைகளை காக்கும் தெய்வமாக அருள்பாலிக்கிறாள். இங்கு தினமும் அம்மனுக்கு பூஜை நடைபெற்றவுடன், சங்கில் வைத்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, கருப்பு மை பொட்டு அர்ச்சகர்களால் வழங்கப்படும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பல வகையான நோய்களும் இங்கு அம்மனை வழிபட்டு, தண்ணீர் தெளித்து கொள்வதால் குணமடையும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்களிடையே …

Read More »

நெல்லையில் அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி!

தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு வீடு வீடாக சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அரசு அனுமதி பெற்ற வாகனங்கள் மூலம் காய்கறிகள்  வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள காரணத்தால், வீடுகளுக்கே சென்று பலசரக்கு பொருட்களையும் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருநெல்வேலி மாநகரில் சுமார் …

Read More »

நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உளுந்து அறுவடை தீவிரம்!

முன் கார் பருவ காலத்தில் நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உளுந்து சாகுபடி செய்யப்படும். தரத்திற்கு பெயர் போன நாட்டு உளுந்து சாகுபடி நெல்லை டவுன், மானூர், பாட்டப்பத்து, கண்டியப்பேரி, இராமையன்பட்டி, மானூர், அணைத்தலையூர், தச்சநல்லூர், சேந்திமங்கலம் ஆகிய பகுதிகளில் வருடம்தோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான முன் கார் பருவ காலத்தில் உளுந்து சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது விளைச்சல் பெருகி உளுந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. …

Read More »

நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் இடமாற்றம்!

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு தேவையான காய்கறிகளை வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே நேரில் சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளிலும் இதனை பின்பற்றி, அனுமதி பெற்ற வியாபாரிகள் மூலம் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வியாபாரிகள் அனைவரும் விற்பனைக்கு தேவையான காய்கறிகளை வாங்க ஒட்டுமொத்தமாக நெல்லை மாநகரில் …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 21

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-21ல்., 63. சிந்துபூந்துறை லிங்க மகிமைச் சருக்கம். 64. பாதலங்கம்பைச் சருக்கம். 65. கருமாரிச் சருக்கம். 66. பொற்றாமரைச் சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 63. சிந்துபூந்துறை லிங்க மகிமைச் சருக்கம்: சிந்துபூந்துறைத் தீர்த்தத்தில் நீராடித் திருமூலலிங்க நாதரையும், வேணுவன நாயகியையும் வணங்கி வந்தால், எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்து இறைவனடி சேர்வர். அறிவிலிகளானாலும், சிந்துபூந்துறையில் நீராடிச் சிவ வழிபாடு செய்தால் அமர வாழ்வு பெறுவர். இத்தீர்த்தத்தில் …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 20

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-20ல்., 61. நெல்லுக்கு வேலியிட்ட சருக்கம். 62. சுவேத முனி காலனை வென்ற சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 61. நெல்லுக்கு வேலியிட்ட சருக்கம்: கல்யாணிபுரம் என்னும் மணவை நகரில் இருந்து முழுதும் கண்ட ராம மன்னனின் மகன் ஆண்டு வந்தான். அவன் நீதியோடு ஆண்டு வந்தும், விதி வழியால் பன்னிரண்டு ஆண்டுகள் மழையே பெய்யவில்லை. நீர் நிலைகள் வறண்டு போயின. நிலத்தடி நீரும் குறைந்து போனது. …

Read More »

இன்று சங்கடகர சதுர்த்தி விரதம்!

நமது வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் என்பதால் இதற்கு “சங்கடகர சதுர்த்தி விரதம்” என்று பெயர். இந்த விரதம் முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை குறித்து ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கழிந்த தேய்பிறை சதுர்த்தி திதியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தினத்தன்று மாலையும், இரவும் சந்திக்கும் வேளையில் கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதாக …

Read More »

பாளையங்கோட்டையில் காவலர்கள் குடும்பத்திற்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது

பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யும், மாநகர போலீஸ் கமிஷனருமான திரு. பிரவின்குமார் அபிநபு அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் மட்டுமே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும், எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடைய வேண்டும் என்று …

Read More »

நெல்லை மாநகரில் நடமாடும் வாகனங்கள் மூலம் 480 டன் காய்கறிகள் விற்பனை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை சேவை தொடங்கப்பட்டது. தினமும் அத்தியாவசியமாக தேவைப்படும் காய்கறி பொருட்களை வீடு தேடி சென்று விற்பனை செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாளையங்கோட்டை மண்டலத்தில் 122, மேலப்பாளையத்தில் 120, நெல்லை …

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 1,08,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டு 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை சபாநாயகர் திரு. …

Read More »

திருநெல்வேலித் தல புராணம் பகுதி – 19:

திருநெல்வேலி தலப்புராணம் பகுதி-19ல்., 58. சப்தமுனிவர்கள் கலியுகத்திற்கு அஞ்சி திருநெல்வேலி வந்த சருக்கம். 59. திருமூலலிங்கச் சருக்கம். 60. வேண்ட வளர்ந்த மா லிங்கச் சருக்கம். ஆகியவற்றை பற்றி காணலாம். 58. சப்தமுனிவர்கள் கலியுகத்திற்கு அஞ்சி திருநெல்வேலி வந்த சருக்கம்: கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களில் முதல் மூன்று யுகங்கள் முடிந்து கலியுகம் பிறந்தது. கலி என்றால் துன்பம் என்று ஒரு …

Read More »
error: Content is protected !!