Monthly Archives: மார்ச் 2021

மேலவீரராகவபுரம் சொக்கலிங்கசுவாமி திருக்கோவில்

சுவாமி: ஸ்ரீ சொக்கநாதர். அம்மை: ஸ்ரீ மீனாட்சி அம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் அழகிய பாண்டியன் என்னும் மன்னன், மதுரையை தலைநகராகக் கொண்டு திருநெல்வேலி வரை ஆட்சி செய்து வந்தான். மன்னன் அழகிய பாண்டியனுக்கு மதுரையில் உறையும் மீனாட்சி – சொக்கநாதர் மீது அளவு கடந்த பக்தி இருந்தது. இதனால் தினமும் திருக்கோவில் சென்று மீனாட்சி – சொக்கநாதரை …

Read More »

திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவில்

திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவில். மூலவர்: வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ பாளையஞ்சாலைக்குமார சுவாமி. உற்சவர்: வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீ சண்முகர். தீர்த்தம்: சிந்துபூந்துறை தாமிரபரணி தீர்த்தக்கட்டம். பாளையஞ்சாலைக்குமார சுவாமி திருக்கோவில் வரலாறு (Tirunelveli Palayansalai kumaraswamy temple history): முற்காலத்தில் தற்போது இந்தக் கோவில் அமையப்பெற்றிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள குறுக்குத்துறை என்னும் ஊரில் சிலைகள் வடிக்கும் …

Read More »

மேலவீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில்.

திருநெல்வேலி சந்திப்பு (மேலவீரராகவபுரம்) வரதராஜ பெருமாள் திருக்கோவில். ` மூலவர்: ஸ்ரீ வீரராகவப் பெருமாள். உற்சவர்: ஸ்ரீ தேவி – பூ தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள். தாயார்கள்: வேதவல்லி தாயார், பெருந்தேவி தாயார். தீர்த்தம்: வீரராகவ தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம். திருநெல்வேலி சந்திப்பு வரதராஜ பெருமாள் திருக்கோவில் வரலாறு (Tirunelveli Junction Varadharaja Perumal Temple History): முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த இந்த பகுதியைச் …

Read More »

திருநெல்வேலி நகரம் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில்

மூலவர்: ஸ்ரீ நீலமணி நாதர். உற்சவர்: ஸ்ரீ தேவி – பூ தேவி சமேத ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள். தாயார்கள்: ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார், ஸ்ரீ கோமளவல்லி தாயார். விமானம்: ஆனந்த விமானம். தீர்த்தம்: பத்மநாப தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம். திருக்கோவில் வரலாறு: சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வியாச மஹரிஷியின் சீடர்களுள் ஒருவரான பைலர் என்பவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். மகாவிஷ்ணு மீது பக்தி செலுத்தி …

Read More »

மாறாந்தை கைலாசநாதர் திருக்கோவில்

மாறாந்தை கைலாசநாதர் திருக்கோவில். சுவாமி: ஸ்ரீ கைலாசநாதர். அம்மை: ஸ்ரீ ஆவுடையம்மை. திருக்கோவில் விருட்சம்: வன்னி மரம். தீர்த்தம்: வருண தீர்த்தம். மாறாந்தை கைலாசநாதர் திருக்கோவில் தல வரலாறு (Marandhai Kailsanathar Thirukkovil History) : முற்காலத்தில் தற்போது கோவில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதியின் வழியாக ஸ்ரீ வல்லப பாண்டியன் என்னும் மன்னன் தனது படைகளை வழிநடத்தி சென்றான். அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது பொழுது சாயும் நேரம் நெருங்கியதால் மன்னன் …

Read More »

கீழக்கல்லூர் புறவேலிநாதர் திருக்கோவில்

keezhakallur puravelinathar temple

கீழக்கல்லூர் புறவேலிநாதர் திருக்கோவில். சுவாமி: ஸ்ரீ புறவேலி நாதர் அம்மை: ஸ்ரீ அழகம்மை திருக்கோவில் விருட்சம்: வில்வம் தீர்த்தம்: தாமிரபரணி. கீழக்கல்லூர் புறவேலிநாதர் சிவன் கோவில் தல வரலாறு (Keezhakallur Puravelinathar Shivan Temple History): முற்காலத்தில் தற்போது திருக்கோவில் அமையப்பெற்றுள்ள இந்தப் பகுதியில் பசு ஒன்று மேய்ச்சலுக்கு வந்து கொண்டிருந்தது. அப்படி மேய்ச்சலுக்கு வந்த அந்தப் பசு தினமும் அங்கிருந்த கல்லின் மீது பாலை தானாகச் சொரிந்து வந்தது. …

Read More »

தாமிரபரணி ஆற்றின் முக்கிய அணைக்கட்டுகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகி, தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு ஆண்டு முழுவதும் வற்றாமல் பாய்ந்து கொண்டிருப்பதால் “ஜீவ நதி” என்ற சிறப்பைப் பெறுகிறது. முன்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்த போது, திருநெல்வேலி மாவட்டத்திலேயே உற்பத்தியாகி, திருநெல்வேலி மாவட்டத்திலேயே கடலில் கலந்துவிடுவதால் “அந்நியன் கைப்படா அந்நீருக்கு இணையும் உண்டோ” என்று ஒரு கவிஞர் …

Read More »

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்

காரையார்  சொரிமுத்து அய்யனார் கோவில். திருநெல்வேலி மாவட்டம்.,  மேற்கு தொடர்ச்சி மலையில்,  காரையார்  வனப்பகுதியில்  தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ளது சொரிமுத்து முத்து அய்யனார் கோவில். சாஸ்தா கோவில்களுக்கெல்லாம் தலைமை பீடமாகக் கருதப்படும் இந்தக் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தக் கோவிலின் சுருக்கமான வரலாற்றைப் பற்றி இங்குப் பார்ப்போம். மூலவர்: 1. பூர்ணா மற்றும் புஷ்கலா உடனுறை ஸ்ரீ சொரிமுத்து அய்யனார், ஸ்ரீ மகாலிங்க சுவாமி. …

Read More »

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் பங்குனி உத்திரம் திருவிழா “திங்கள் நாள் விழா மல்கு திருநெல்வேலி” என்று சம்மந்தர் பாடிய திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவிலில் அனைத்து மாதங்களும் திருவிழாக்கள் தான். தற்போது திருநெல்வேலி சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் பங்குனி மாதம் 5 (18/03/2021) ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. …

Read More »

குல சாஸ்தா, குல தெய்வம் கோவில்கள் பற்றிய தொகுப்பு

குல சாஸ்தா, குல தெய்வம் கோவில்கள் பற்றிய தொகுப்பு   திருநெல்வேலி ஜில்லா என்று பொதுவாக அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் நாஞ்சில் நாடு  என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் பங்குனி உத்திரம் அன்று குல தெய்வ வழிபாடு செய்வது விசேஷமாக நடைபெறும். இதற்காக அன்று இந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல சாஸ்தா கோவில் இருக்கும், அந்தக் குடும்பத்திற்கென …

Read More »

திருக்குறுங்குடி அழகியநம்பி பங்குனி திருவிழா

வைணவ திவ்ய தேச ஸ்தலங்கள் நூற்றியெட்டினுள் ஒன்றாகத் திகழ்வது திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் திருக்கோவில் ஆகும். இங்குப் பஞ்சகேத விமானத்தின் கீழ் மூலவர் ஸ்ரீ நம்பிராயர் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். நம்பியாற்றின் கரையில் அமையப்பெற்றிருக்கும் இந்தத் திருக்கோவிலில் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை மேல் நம்பி, திருப்பாற்கடல் நம்பியென ஐந்து நிலைகளில் பெருமாள் சேவை சாதிக்கிறார். முன்னர் மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் …

Read More »

திருநெல்வேலி அருகில் உள்ள முக்கிய அணைக்கட்டுகள்

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சுற்றுப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு ஆறுகள் உற்பத்தியாகின்றன. அந்த ஆறுகளின் குறுக்கே பல்வேறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைப்பகுதிகள் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வரப்பிரசாதமாக திகழ்கின்றன. இந்த அணைகள் மூலம் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இங்கு நாம் திருநெல்வேலி மாநகருக்கு அருகில் உள்ள சில முக்கிய அணைகளின் விவரங்கள் பற்றி காணலாம். 1. அடவிநயினார் அணை: திருநெல்வேலி அருகே …

Read More »