Monthly Archives: டிசம்பர் 2019

Kurukkuthurai Murugan Kovil

குறுக்குத்துறை முருகன் கோவில் திருவுருமாமலை என்று சிறப்பிக்கப்படும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். மூலவர்: சுப்பிரமணிய சுவாமி. தீர்த்தம்: தாமிரபரணி. சிறப்பு: குடைவறைத் திருமேனி. திருவுருமாமலை பெயர்க் காரணம்: இங்குள்ள கற்பாறைகள் தெய்வ திருவுருவங்களை செதுக்கிட ஏற்றதாக இருந்ததால், இங்கு சிற்பிகள் பாறைகளை செதுக்கி உருவம் கொடுத்தார்கள் என்பதால் திருவுருமாமலை என்ற பெயர் வழங்கப் பெற்றது. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள இந்த பகுதியில் காணப்படும் …

Read More »

Tirunelveli Pittapurathi Amman Kovil

திருநெல்வேலி பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில் திருநெல்வேலி மாநகரின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்கும், ஸ்ரீ பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில். மூலவர்: பிட்டாபுரத்தி அம்மன். அம்மைக்கு விளங்கும் வேறு பெயர்கள்: நெல்லை மாக் காளி, சண்பகச் செல்வி, வடக்கு வாசல் செல்வி. சிறப்பு சன்னதி: அகோர விநாயகர். தீர்த்தம்: தாமிரபரணி. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் பிரம்மனை குறித்து கடுந் தவம் இருந்தனர். அவர்களின் தவத்திற்கு இறங்கிய …

Read More »

Tirunelveli Perathu Selvi Amman Kovil

திருநெல்வேலி பேராத்துச்செல்வி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றில் கிடைத்த அற்புத செல்வியாம், ஸ்ரீ பேராத்துச்செல்வி அம்மன் திருக்கோவில். மூலவர்: பேராத்துச் செல்வி அம்மன். தீர்த்தம்: தாமிரபரணி (குட்டத்துறை) விருட்சம்: வேம்பு. திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் தற்போது கோவில் அமையப் பெற்றுள்ள இந்த பகுதியில் வசித்த ஏழை பக்தர் ஒருவர், அம்பாளை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தார். அவருக்கு அம்பாளுக்கு என ஒரு தனி கோயில் கட்ட வழிபட வேண்டும் …

Read More »

Manimoortheeswaram Uchishta Ganapathy Kovil

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் ஆசியாவின் தனிப் பெரும் விநாயகர் கோவில் என்று சிறப்பிக்கப்படும், மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோவில். மூலவர்: ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி. சிறப்பு சன்னதி: சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மை, விநாயகரின் 32 வடிவங்களான, சொர்ண ஆகர்ஷன பைரவர். தீர்த்தம்: தாமிரபரணியின் ரிஷி தீர்த்தக் கட்டம். திருக்கோவில் வரலாறு: முற்காலத்தில் வித்யாகரன் என்னும் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் படைக்கும் கடவுளான நான்முகனை வேண்டி கடுமையான …

Read More »

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-6)

முக்கிய திருவிழாக்கள் : இந்த திருக்கோவிலில் வருடத்தின் பன்னிரு மாதங்களும் சிறப்புமிக்க பல உற்சவங்கள் நடைபெற்று வருவதாக தலப் புராணம் விவரித்து கூறுகிறது. இதனை “திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி” என்று திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் புகழ்ந்து பாடிப் போற்றியுள்ளார். சித்திரை மாதம்: சித்திரை மாதம் முதல் நாள், சித்திரை விசு அன்று சுவாமி சந்திரசேகரர் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் எழுந்தருள, தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெறும். (தலப் புராணத்தில் …

Read More »

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-5)

திருக்கோவில் அமைப்பு – அம்மை சன்னதி: அம்மை சன்னதி ராஜ கோபுரம் வாயில் இருபுறமும் முறையே விநாயகர், சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. அவர்களை வணங்கி உள்ளே சென்றால் அழகிய சிம்ம தூண்களை கொண்ட ஊஞ்சல் மண்டபம் நடுநயமாக இருக்கிறது. அதனை தாண்டி உள்ளே சென்றால் வடக்கு பக்கம் ஆயிரங்கால் மண்டபம் இருக்கிறது. ஊஞ்சல் மண்டபத்துக்கு தெற்கே பொற்றாமைரை தீர்த்தக் குளமும், அத் தீர்த்தத்தின் மேற்கு கரையில் விநாயகர் சன்னதி, மீனாட்சி …

Read More »

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-4)

தாமிர சபை: சிவபெருமான் நடனம் புரிந்த பஞ்ச சபைகளுள் ஒன்றான தாமிர சபை இங்கு அமையப் பெற்றுள்ளது. சுவாமி நெல்லையப்பர் கோவிலின் இரண்டாம் மேல பிரகாரத்தில் உள்ள இந்த சபை, மரத்தால் நிர்மாணிக்கப் பட்டு, செப்பு கூறை வேயப்பட்டு காட்சியளிக்கிறது. இங்கு தான் சுவாமி பிரம்ம தாண்டவம் ஆடியருளியதாக கூறப்படுகிறது. சகஸ்ர லிங்கம்: சுவாமி நெல்லையப்பர் கோவிலின் இரண்டாம் வடக்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் காட்சியளிக்கிறார் சகஸ்ர லிங்க சுவாமி. …

Read More »

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-3)

சுவாமி திரு மூல மகாலிங்கர்: இவரே இந்த தலத்தின் ஆதி மூலவர் ஆவார். கிழக்கு நோக்கிய தனி கருவறையில் லிங்கத் திருமேனியராக எழுந்தருளி உள்ள இவருக்கே இன்றும் முதல் வழிபாடு நடைபெறுகிறது. இவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் தான் நெல்லையப்பருக்கு பூஜை நடைபெறும். ஆதிப் பிரளய காலத்தில் நான்கு வேதங்களும் இந்த வேணுவனத்தில் உள்ள திரு மூல மகா லிங்கத்தை வணங்கியே அழிவிலாத நிலையப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. …

Read More »

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-2)

காந்திமதி அம்மை வரலாறு: முற்காலத்தில் உமையம்மை இப் பூவுலக உயிர்கள் உய்யும் பொருட்டு, சிவபெருமானிடம் இரு நாழி நெல் பெற்று, கைலாய மலையை விட்டு நீங்கி, பெருமான் வேண்ட வளர்ந்து திருவிளையாடல் புரிந்த இந்த மூங்கில் காடாகிய வேணு வனம் வந்து., வறியவர்களுக்கு உணவு-உறைவிடம் கொடுத்தல், மகப்பேற்றுக்கு உதவுதல், கற்பவர்களுக்கு உணவளித்தல், பிள்ளைகளைத் தத்து எடுத்து வளர்த்தல், தண்ணீர் பந்தல் அமைத்தல், அடியார்கள் தங்க மடம் அமைத்தல், சுமங்கலி பெண்களுக்கு …

Read More »

Tirunelveli Nellaiappar kovil (Paguthi-1)

“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என திருஞானசம்பந்தரும், “தண் பொருநைப் புனல் நாடு” என சேக்கிழார் பெருமானும், “பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திரு நதி” என்று கவிச் சக்கரவர்த்தி கம்பரும் பாடிப் புகழ்ந்த பெருமை மிகு தலம் திருநெல்வேலி காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில். சுவாமி பெயர்: திருமூலமகாலிங்கர் ( ஆதி மூலவர் ) நெல்லையப்பர் ( வெட்டுபட்ட சுயம்பு மூர்த்தி ) நெல்லை கோவிந்தர். …

Read More »

Tiruchendur Subramaniya Swamy Thirukovil (Paguthi – 3)

திருக்கோவில் சிறப்புக்கள்: இங்கு தரப்படும் பன்னீர் இலை விபூதி, தீராத நோய்கள் தீர்க்கும் மருந்தாக விளங்குகிறது. இந்த பன்னீர் இலை விபூதியை பெற்று விசுவாமித்திரர் தன்னுடைய குன்ம நோய் மற்றும் ஆதி சங்கரர் தன்னுடைய காச நோய் நீங்கப்பெற்றதாக வரலாறு கூறுகிறது. ஆதி சங்கரர் இங்கு பாடியுள்ள சுப்பிரமணிய புஜங்கம் என்னும் பாடலில் இந்த பன்னீர் இலை விபூதியின் மகத்துவத்தை பாடியுள்ளார். இந்த பன்னீர் இலையில் பன்னிரெண்டு நரம்புகள் இருக்கும், …

Read More »

Tiruchendur Subramaniya Swamy Thirukovil (Paguthi – 2)

உற்சவர் ஜெயந்தி நாதர்: இங்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் பிரதான பிரதி பிம்ப உற்சவராக விளங்குகிறார் ஜெயந்தி நாதர். கந்த சஷ்டி திருவிழாவில் இவரே கடற்கரைக்கு எழுந்தருளி சூரனை சம்காரம் செய்து வெற்றி பெறுவார் என்பதால் இவருக்கு ஜெயந்தி நாதர் என்று பெயர். இவரே நித்திய உபயதாரர் கட்டளையான தங்கத் தேர் உலாவில் எழுந்தருளுவார் என்பதும் சிறப்பம்சம். உற்சவர் குமர விடங்கப் பெருமான்: இங்கு சண்முகப் பெருமானின் பிரதான உற்சவராக …

Read More »
error: Content is protected !!