Monthly Archives: நவம்பர் 2019

Ilanji Kumaran Kovil

இலஞ்சி என்ற சொல்லுக்கு ஏரி, குளம், மடு, பொய்கை, மதில், மகிழ மரம் என பல பொருள் உண்டு என இலஞ்சி தல புராணம் குறிப்பிடுகிறது. “இலஞ்சி” என்ற சொல்லை பல கவிஞர்கள் தங்கள் கவிப்பாக்களில் பயன்படுத்தி உள்ளனர். “இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று இலஞ்சியமர்ந்த பெருமாளே” என அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தை குறிப்பிடுகிறார். அது போல மதுரைக் காஞ்சியில் “ஒளிறு இலஞ்சி” என்றும் மலைபடுகடாகத்தில் ” சுடர்ப்பூ இலஞ்சி” என்றும் …

Read More »

Sankarankovil

பாண்டிய நாட்டின் பஞ்ச பூத தலங்களுள் மண் தலமாக திகழும் தலம் சங்கரன்கோவில் புராண காலத்தில் புன்னை வனம் என்று அழைக்கப்பட்ட இந்த தலம், சங்கர நயினார் கோவில் என்றே அழைக்கப்பட்டு தற்போது சங்கரன்கோவிலாக மருவியுள்ளது. இந்த தலத்துக்கு பூ கைலாயம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்ற பெயர்களும் உண்டு. சுவாமி பெயர்: சங்கர லிங்க சுவாமி. அம்மை பெயர்: கோமதி அம்மை. திருக்கோவில் விருட்சம்: புன்னை மரம். …

Read More »

Palayamkottai Ayirathamman Kovil

பாளையங்கோட்டை மாநகரின் மத்தியில் அமையப் பெற்றுள்ளது ஆயிரத்தம்மன் திருக்கோவில். மைசூர், குலசேகரன்பட்டினம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா திருவிழா மிகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த தசரா திருவிழாவின் முக்கிய கோவிலாக திகழ்வதே இந்த ஆயிரத்தம்மன் திருக்கோவில் தான். இந்த திருக்கோவிலில் உறையும் அம்மன் முன்னர் இருந்த இடம் பட்டாளத்து திடல் என்று அழைக்கப்படும் எருமைக் கடா மைதானம் ஆகும். இது தற்போதும் சமாதானபுரம் பட்டாளத்து மாரியம்மன் கோவில் எதிரே …

Read More »

Brahmadesam Kailasanathar Kovil

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் கங்கைக்கு நிகரான சிறப்புக்களை உடைய கடனை ஆற்றின் தென் கரையில் அமையப்பெற்றுள்ள திருக்கோவில் பிரம்மதேசம். இந்த கோவிலின் புராண பெயர் “அயனீச்சுவரம்” என்றும் வரலாற்று பெயர் “ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்” என்றும் சிறப்பித்து கூறப்படுகிறது. சுவாமி பெயர்: கைலாசநாதர். அம்மை பெயர்: பெரியநாயகி அம்மை. திருக்கோவில் விருட்சம்: இலந்தை மரம். தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், கடனை நதி. சிறப்பு …

Read More »

Palayamkottai Sivan Kovil

திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டை நகரின் மத்திய பகுதியில் அமையப் பெற்றுள்ளது., பாளையங்கோட்டை கோமதி அம்பாள் உடனுறை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவில். புராண காலத்தில் செண்பகாரண்யம் என்று வழங்கப்பெற்ற இக்கோவில் பாளையங்கோட்டை சிவன் கோவில் என்றே தற்போது பிரபலமாக அழைக்கப்படுகிறது. சுவாமி பெயர்: திரிபுராந்தீஸ்வரர். அம்மை பெயர்: கோமதி அம்மை. திருக்கோவில் விருட்சம்: வில்வ மரம். தீர்த்தம்: தாமிரபரணி. சிறப்பு சன்னதிகள்: சண்முகர் சன்னதி, ஒளவையார் சன்னதி, ஆயிரத்தம்மன் சன்னதி, சாஸ்தா …

Read More »

Thirupudaimaruthur

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறும், கடனை ஆறும் சங்கமிக்கும் இயற்கை ஏழில் சூழ்ந்த இடத்தில் அமையப்பெற்றுள்ளது திருப்புடைமருதூர் கோமதி அம்மை உடனுறை நாறும்பூநாதர் திருக்கோவில். இந்த தலம் புராணத்தில் “புடார்ஜீனம்” என்று வழங்கப் பெறுகிறது. அர்ஜீனம் என்றால் மருத மரம் என்று பொருள். பாரத தேசத்தில் மருத மரத்தை தல விருட்சமாக கொண்ட முக்கிய தலங்கள் மூன்று. அவற்றுள் இத்தலம் கடைசியாக உள்ளதால் இத்தலம் புடார்ஜீனம் ஆகும். தெற்கே மருத …

Read More »

Sivasailam Kovil

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் இயற்கை வளம் கொழிக்கும் சோலைகளின் மத்தியில் அமையப் பெற்றுள்ளது சிவசைலம் பரமகல்யாணி அம்மை உடனுறை சிவசைலநாதர் திருக்கோவில். தேவாரத்தில் வைப்புத் தலமாக வைத்து பாடப்பட்டுள்ள இக்கோவிலின் புராணப் பெயர் “அத்தீச்சுவரம்” ஆகும். சுவாமி பெயர்: சிவசைலநாதர். அம்மை பெயர்: பரமகல்யாணி அம்மை. திருக்கோவில் விருட்சம்: கடம்ப மரம். தீர்த்தங்கள்: கடனை ஆறு (கடனா நதி). சிறப்பு சன்னதி: …

Read More »

Navathirupathi – 9: Thirutholaivillimangalam (Irattai Thirupathi) Vadakku Kovil

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஒன்பதாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஐந்தாவதாகவும் விளங்குவது “திருத்தொலைவில்லிமங்கலம்” வடக்கு கோவில். இது கேதுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி …

Read More »

Navathirupathi – 8: Thirutholaivillimangalam (Irattai Thirupathi) Therku Kovil

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் எட்டாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் நான்காவதாகவும் விளங்குவது “திருத்தொலைவில்லிமங்கலம்” தெற்கு கோவில். இது ராகுவின் அம்சமாக விளங்குகிறது. தற்போது இக்கோவில் இரட்டை திருப்பதி என்றே வழங்கி வருகிறது. நவதிருப்பதிகளுள் இரண்டு கோவில்கள் ஒரே இடத்தில் இருப்பதால் இரட்டை திருப்பதி …

Read More »

Navathirupathi – 7: Thirukulanthai

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்து கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஏழாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஆறாவதாகவும் விளங்கும் கோவில் “திருக்குளந்தை”. இது சனியின் அம்சமாக விளங்குகிறது. திருக்குளந்தை என்னும் வரலாற்று பெயரை கொண்ட இத்தலம் தற்போது “பெருங்குளம்” என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் …

Read More »

Navathirupathi – 6: Thenthiruperai

பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள்., தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை “நவதிருப்பதிகள்” என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஆறாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஏழாவதாகவும் விளங்கும் கோவில் “தென்திருப்பேரை”. இது சுக்கிரனின் அம்சமாக விளங்குகிறது. 108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மூலவர் பெயர்: மகரநெடுங்குழைக்காதர் (அமர்ந்த கோலம்) உற்சவர் பெயர் …

Read More »